உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243

சாந்தியின் சிகரம்

வெள்ளை மாதின் நிலைமையை விவரிக்கவா வேண்டும்? சந்தடி செய்யாமல், எடுத்துக் கொடுத்தாள். போலீஸாருடன் இன்னும் பல அதிகாரிகள் வந்திருந்தார்கள். நாயுடுகாருதான் ப்ரதானம் வகிக்கிறார். கடிதங்கள் கிடைத்ததால், இவர்கள் வெறும் சோதாக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; துரைக்கண்ணனின் மகளை ஏமாற்றி, அவளுடைய சொத்தை அடைவதற்காகவே, அவள் தாய்நாடு திரும்புவதற்கு சில தினங்களுக்கு முன்பு, தான் அவளை மணந்ததாக நாடகம் நடத்தினார்கள்—என்பது போன்ற உண்மைகள் வெளியாகி விட்டது. வெள்ளை மாதின் இதயம் ஏற்கெனவே பலவீனப்பட்டுப் படுக்கையுடன் இருந்ததாலும், திடீரென்று இந்த அதிர்ச்சி உண்டாகி விட்டதால், இதயம் நின்று விடும் போன்ற நிலைமை உண்டாகி விட்டது. இதையறிந்த நாயுடுகாரு… “அம்மணீ! நீங்கள் கடைசி மூச்சு போகும் வரையில், செய்த பாபம் போதும்; இப்போதாவது கொலை நடந்தது எப்படி என்கிற உண்மையைச் சொன்னால், உங்கள் மதப்படிக்கு கர்த்தன் உங்களை மன்னிப்பார்! பாதகத்தை மறைத்தால், பயங்கர நரகந்தான் என்பதை மறக்க வேண்டாம்..” என்றார்.

வெள்ளை மாதின் மூச்சு திக்கு முக்காடத் தொடங்கியது… அந்த நிலைமையில், ஆவேசம் வந்தவளைப் போல், துள்ளி குதித்தவாறு.. “நான் பாவி… படுபாவி. நான் கேவலம் வேசிகள் இனத்தைச் சேர்ந்தவள். என்னோடு வந்த இருவரும், கேவலமான சோதாக்கள். இந்தியா முழுதும் சுற்றிப் பார்க்கவும், துரைக்கண்ணனின் செல்வத்தை விழுங்கவுமே, நாங்கள் அவர் மகளைக் குல்லாய் போட்டு மணந்ததாக ஒரு நாடகமாடி, கப்பலேறி வந்தோம். எந்த சமயம் என்ன விபத்து நேருமோ, அப்போது இதைக் குடித்து விடவே, விஷத்தையும் கையு-