உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245

சாந்தியின் சிகரம்

களைப் பல புத்தகங்கள் படித்திருக்கிறேன். நேரில் என் வாழ்க்கையிலேயே பார்த்து விட்டேன்,” என்று கூறி முடிப்பதற்குள், கீழே விழுந்து விட்டாள்.

ஏற்கெனவே, துரைக்கண்ணன் எழுதிய வில்லை தாக்கல் செய்திருப்பதால், சகல விஷ்யமும் விளங்கி விட்டது. இனி மேல், விவரிக்க வேண்டுமா! சர்க்காரின் சட்டப்படிக்குச் சகல காரியங்களும் விமரிசையாக நடந்து, தக்க ருஜுவுடன் நிறைவேறியது. இந்த வழக்கின் அபரிமிதமான ஜெயத்தைக் கண்டு, அந்த ஊரே ஆனந்தக் கூத்தாடியது என்றால் மிகையாகாது.

30

ங்கு பார்த்தாலும், சிலுசிலுப்பான காற்று வீசுகிறது. இரவு பூராவும், பெய்த மழையினால் தண்ணீர் தேக்கமும், குளிரான வாடையும் கலந்து வீசுகிறது.பறவைகள் ஒன்றிரண்டு கூண்டிலிருந்து தண்ணீர் உதிர, சிறகடித்துக் கொண்டு பறந்து செல்கிறது. காலையில் சிறைக் கதவுகளைத் திறந்து விடும் வார்டர், ஸ்ரீதரனின் தனிக் கம்பிக் கதவைத் திறந்து… “என்னப்பா! ஜபம் பண்றாயா?” என்று ஏளனமாய்க்கேட்டான்… அதே சமயம், ஜெயிலர் மிக மிக சந்தோஷத்துடன், புன்முறுவல் பூத்த வதனத்துடன் ஸ்ரீதரனின் முன்பு தோன்றி, ஒரு கடிதத்தைத் தானே நீட்டினார்.

எப்போதும், ஜெயிலர் ஆபீஸில் இருந்தபடியே, ஆட்கள் மூலம் கைதிகளை வரவழைத்து விஷயத்தைச் சொல்வாரேயன்றி, தானாக வந்து அழைப்பது என்பது ஸாதாரண கைதிகளுக்குக் கிடையாது. தேசியத் தலைவர்களில் சிலருக்கு அந்த மரியாதை உண்டு. இவ்விஷயத்தில் உள்ளுக்குள் இருக்கும் ரகஸியம் பிறர் அறியா-