உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251

சாந்தியின் சிகரம்

உத்தமருக்கு என்ன குறை தெரியுமா! இவருக்கு ஐந்தாறு குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு கால விதியின் கோலத்தினால், பிரம்பு வேலை செய்யும் போது, எக்கச்சக்கமாய்க் கண்ணில் பட்டு, ஒரு கண் போய் விட்டதாம் ஒரு கண்தான் நன்றாகத் தெரிகிறதாம். அந்த ஊனத்தினால், அவளை யாரும் மணக்க மறுத்து விட்டார்களாம். வயதாகிக் கொண்டு வருகிறதாம்; அதுதான் பாவம் கவலை, சதா வேதனைப்படுகிறார். நீயோ லக்ஷயவாதி, அவருடைய மகளை நீ மணந்து, அவருக்கு சாந்தியைக் கொடுக்க வேண்டும்,” என்று சொல்லும் போது, ஸ்ரீதரனைத் தூக்கி வாரிப் போட்டது.

ஜெயிலருக்கும் மனது குழம்பி, விசனம் மேலிட்டு வருந்தியதால், தவித்தார். இம்மாதிரி இந்த மனிதன் கேட்பார் என்றே அவர் நினைக்காததால், திடுக்கிட்டுப் போய்… “ஸார்! இந்த தண்டனைக்கு நான் ஒப்பவே மாட்டேன். நேற்றிரவு இவரிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கையில், என் குடும்ப வரலாற்றையும் சொல்லும்படியாகி விட்டது. நான் செய்த துர்ப்பாக்ய வசத்தில், என் விதியிப்படியானால், அதைக் கொண்டு, உம்மை பாதிக்க வைக்க நான் தயாராக இல்லை. இதற்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். நான் ஏற்கெனவே செய்துள்ள பாதகம் போதும். இனியும் பாதகத்தைச் செய்ய நான் சம்மதிக்க மாட்டேன். இந்த விஷயத்தை நீங்கள் வாபஸ் வாங்கத்தான்வேணும்,” என்று ஜெயிலர், ஸ்ரீதரனின் பிதாவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்!

இதன் பிறகே, ஸ்ரீதரனுக்கு சற்று சரியாக மூச்சு வந்தது. “அப்பா ! கல்யாண விஷயத்தில் லவலேசமும்