உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

256

ணுக்கு வைத்து, வெகு வெகு திறமையுடன் சிகிச்சை செய்ததில், இந்தப் பெண்ணுக்குக் கண்ணு மிகவும் நன்றாகத் தெரிகிறதாமே! இந்த ஆச்சரியத்தை ஊரே கொண்டாடி, ஸ்ரீதரனைக் கடவுளென்றே எண்ணி பூஜிக்கின்றது ஸார்! என்ன மேதாவி ! என்ன நிபுணன் ஸார். அந்தப் பெண்ணைத் தனது தம்பிக்கு விவாகம் கூட செய்து விட்டாராமே, இப்படிப்பட்ட பரோபகாரியைக் கண்ட துண்டா ஸார்.”

“அடேடே! நானும் கேள்விப்பட்டேன். யாரோ ஒரு பெண்ணுக்குப் புது மாதிரி வைத்யம் செய்து, கண்ணைக் கொடுத்தாராம் என்று. தன்னை அடக்கி ஆண்டு ஜெயிவில் வைத்திருந்த ஜெயிலர் பெண்ணுக்கா, இத்தகைய உபகாரம் செய்திருக்கிறார்! கேட்கக் கேட்க அதி ஆச்சரியமா யிருக்கிறதே! கூடிய சீக்கிரத்தில், ஸ்ரீதரனை, வெளி நாடுகளுக்கு மறுபடியும் அழைத்துப் போவார்களென்று ஒரு வதந்தி உலாவுகிறது அதற்கவர் இசைய மாட்டார். கூடிய சீக்கிரத்தில், அவரே ஒரு காஷாயம் தரித்த லக்ஷ்ய புருஷனாய் விடுவார் என்று ஒரு வதந்தி வருகிறது. எப்படி நடக்குமோ, தெரியாது. ஸரி, இன்று ஸ்ரீக்ருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஏதோ பெரிய உத்ஸவம் அங்கு நடக்கிறதாம். நான் இன்று பூராவும் அங்குதான் இருக்கப் போகிறேன். நீங்களும் வாருங்கள்,” என்று இருவரும் பேசிக் கொண்டு, சாந்தியின் சிகராலயத்திற்குச் சென்றார்கள்.

டாக்டரின் நிரபராதித் தன்மையை மட்டும் கொண்டாடி வியப்புற்ற உலகம், இன்று அவரால் நிர்மாணிக்கப்பட்ட சாந்தியின் சிகராலயத்தையும், அவர் நூதன முறையில் கண் வைத்தியம் செய்ததையும் பற்றி, அபாரமாகக் கொண்டாடத் துடங்கி விட்டது. என்றாலும்,