உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

258

போது அடையும் பேரானந்தத்தையும் இதை விட, பெரியதோர் சந்தோஷம் உண்டாகிவிடப் போகிறதென்பதையும் நீயே சற்று யோசித்துப் பாரு. உன் வயிறு செய்த பாக்கியமும், நீ செய்த புண்ணியமும், இன்று உன் மகனை லட்சிய புருஷன் என்றும், கலியுக தன்வந்திரி என்றும், கைராசிக்காரன் என்றும், இன்னும் ஏதேதோ சொல்லி மகிழ்கிறார்களே, அதற்கு அடியோடு ஹானி வந்து விடும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். என் அந்தராத்மா சொல்லுகிறது. எனக்கு இப்போதுள்ள சகலமான புகழும், மண்டிப் போய், நான் வெறும் சக்கையாக மதிக்கப்பட்டால், அதைக் கண்டு உன் மனந்தானேம்மா, துடிதுடித்து வருந்திக் கண்ணீர் சொரியச் செய்யும். அதைச் சற்று யோசித்துப் பாரேன்.

கமல :- நீ சொல்வது எனக்குப் புரியவே இல்லையேப்பா! உலகம் பூராவும் கடவுள் உள்பட, மணவாழ்க்கையின் மூலம், பலவித இன்பத்துடனிருக்கையில், உனக்கு மட்டுமா அவ்வாழ்க்கை கசந்து விட்டது. அதனால் துன்பங்களும், அபகீர்த்தியும் வரும்…

ஸ்ரீதர்:- அம்மா! உலக விவகாரமறியாதவர்களைப் போல், கேட்கிறாயேம்மா! நான் இன்னும் விவரித்தா சொல்ல வேண்டும்? மணவாழ்க்கை என்கிற தடாகத்தில், காலை வைத்து விட்டால், முதலில் ஆசை, சுயநலம் என்கிற முதலைகள் இரண்டு காலையும் பிடித்து இழுத்து, என்னுடைய சகலமான பலத்தையும் தான் உறிஞ்சிக் கொண்டு, என்னைக் கையாலாகாதக் கட்டையைப் போலாக்கி, எந்தக் காரியத்திலும் திடசித்தமில்லாத ஒரு பலவீனத்தைக் கொடுத்து விடும். அதன் பலனாக,