உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

260

உயர்வாகாது. ஏற்கெனவே ஊர் ஜனங்கள், உன்னை எத்தனைதான் கொண்டாடிய போதிலும், ப்ரம்மச்சாரி கட்டை வேஷதாரி, தன்னுடன் கூடவிருக்கும் துளஸிபாயை, ராதாவை… சேச்சே… என் வாயால் சொல்லவும் பிடிக்கவில்லை; அப்படி அவதூறாகச் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் இடங்கொடுக்காமல், நீயும் உலகத்தவர்களைப் போல், மணந்து கொண்டு உன்னுறுதியுடன் தளராது, உழைக்கவே நான் ஆசைப்படுகிறேன். இதோ பாரு,ஸ்ரீதர்! எனக்கோர் யோசனை தோன்றுகிறது. அதாவது திருவுள்ளச் சீட்டுப் போட்டு பார்க்கலாம், அதில் எப்படி வருகிறதோ, அதே போல் நான் விட்டு விடுகிறேன். என்ன சொல்கிறாய் என்று கெஞ்சினாள்.

பாக்குவெட்டியில் அகப்பட்டது போல், டாக்டர் மனது குழம்பித் தவிக்கிறது. தனது உறுதியான லக்ஷ்யத்தைக் கைவிடுவதா அல்லது பெற்ற தாயாரின் மனோரதத்தைப் பூர்த்தி செய்யாது, புறக்கணித்து வாட வைப்பதா! எதுவும் எனக்கு மிகுந்த பாதகமாகவன்றோ இருக்கிறது… அம்மா சொல்படி திருவுள்ளச் சீட்டுப் போட்டு, விவாகம் செய்து கொள்ள வேண்டுமென்று வந்து விட்டால், என்ன செய்வது.. ஹா… இதுதான் சரியான சோதனை. என் வாழ்நாளில் இது போல், கலங்கியதில்லை… மகா ஞானியாயும், முற்றுந் துறந்த முனிவராயும் இருந்த பட்டிணத்தடிகள் கூட, பெற்ற தாயின் பாசத்தைப் புறக்கணிக்கவில்லை; நான் அந்த அபக்யாதிக்கு ஆளாக வேண்டுமா! பகவானே! எனக்கித் தகைய மன உறுதியைக் கொடுத்தவனும் நீயே; அதை சோதிக்க முன் வந்திருப்பனும் தீயே; எப்படியாவது, என் தாயாரின் மனது சாந்தியடைந்தால் போதும்… எனக்கும் ,அனுகூலமான பதிலாகவும் என் தாயாருக்கும்