உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு.கோ. 103-வது நாவல்

262

டான். நேரே அனாதை நிலையத்திற்குச் சென்று, அங்குள்ள அனாதைக் குழந்தைகளுடன் குதித்துக் கூத்தாடி, களி வெறி கொண்டு, பொங்கிப் பூரித்தான். இதை விட நித்ய கல்யாண சுகம் அந்தக் குழந்தைகளுக்கு வேறென்ன இருக்கிறது. இந்த சந்தோஷத்தைக் கண்டு, தானும் பகிர்ந்து கொண்டு, சந்தோஷிப்பது போல், தோட்டத்திலுள்ள புஷ்பங்களின் பரிமளம், மெல்லிய காற்றில் மிதந்து வந்து, எல்லோருடைய உள்ளங்களையும், களிக்கச் செய்தது. அனாதைக் குழந்தைகளுடன், பூஜாமண்டபத்திற்குச் சென்று, ஆநந்தமாய் ப்ரார்த்தனை செய்து, பஜனை பண்ணவாரம்பித்தான்.

அந்த பஜனாம்ருத இசையின் நாதம், ரீங்காரத்துடன் ஓங்காரத்தை எழுப்பி, அந்த கட்டிடம் பூராவும் எதிரொலித்துப் பூரிக்கச் செய்தது. அங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பகவானின் முகத்தில், திவ்ய தேஜஸுடனும், ஆநந்தத்துடனும், புன்முறுவல் தவழ்ந்து, அந்த மின்ஸார சக்தி ஸ்ரீதரனின் இதயத்தில் அம்ருதம் போல், பாய்ந்து ஆநந்த சாகரத்திலாழ்த்தி, சாந்தியின் சிகரத்தில் அமரச் செய்தது என்றால், அது மிகையாகாது. இதை விட, பேரின்ப சுகம் வேறென்ன இருக்கின்றது!

மங்களம்.

சுபம்.சுபம்.சுபம்.