உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

சாந்தியின் சிகரம்

அயர்ந்து தூங்குவதாகத் தெரிந்ததும், சந்தோஷத்துடன் தாயாரின் விடுதிக்கு வந்தான். கமலவேணி தூங்காமல் ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, சற்று கவனித்துக் கூர்ந்து பார்த்தான். கட்டிலின் சமீபத்திலுள்ள ஜன்னலாகையால், கடிதத்தின் விவரம் புரியவில்லை என்றாலும், தான் அன்று தன் தம்பிக்கு எழுதித் தாயாரிடம் கொடுத்த அதே கடிதந்தான் இது என்பது மட்டும் சடக்கென்று விளங்கி விட்டது.

அவ்வளவுதான்; அவன் கண் முன், சகல விஷயங்களும் படம் போல் சுற்றி நினைப்பூட்டின. அக்கடிதத்தைக் காணாமல், தன் தாயார் தேடியதும், அதே நினைவாகக் கவலைப் பட்டதும், பளிச்சென்று நினைவுக்கு வந்ததும், அக்கடிதத்தைத் திரும்பிப் பெறுவதற்காகத் தன் தாயார்தான், ஒரு வேளை, இப்படி ஏதாவது அசட்டுத் தனமாகச் செய்திருப்பாளா?… அடாடா இப்படிச் செய்திருப்பாளானால், என்ன பயித்தியக்காரத்தனமும், அறிவிலிச் செய்கையுமாகும்? இதையும் உடனே விசாரித்து விட வேண்டும் என்று தீர்மானித்தபடி “அம்மா! உடனே கதவைத் திற! அவசரம்! அவசரம்!” என்று மெல்ல அழைத்தான்.

இக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டலறியவாறு எழுந்த கமலவேணிக்கு, தன்னுடைய இளையகுமாரனுக்குத்தான் ஏதோ வந்து விட்டது என்று சொல்ல வந்திருப்பதாக ஒரு பயங்கரமான எண்ணம் தோன்றியதால், கதிகலங்கிப் போய்க் கடிதத்தை எப்படி மறைப்பது, என்ன செய்வது என்பது கூட மறந்து போய்த் தவித்தவாறு… “ஸ்ரீதரனா! என்னப்பா விஷயம்? தம்பிக்கு ஏதாவது?…” என்று இழுத்தவாறு சடக்கென்று கதவைத் திறந்து விட்டாள்.

ஸ்ரீதரன் ஒரே பாய்ச்சலாக உள்ளே பாய்ந்து, “அம்மா! தம்பிக்கு ஒன்றுமில்லை…” என்று கூறியபடியே, தாயாரின் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கிக் கொண்டு, “அம்மா! இதுதான் விஷயம், வேறு ஒன்றுமில்லை. இக்கடிதத்-