உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

58

கமலவேணி இடைமறித்து, “தம்பி!.. ஸ்ரீதர்! நம் வம்ச பரம்பரையின் கண்ணியத்தைக் குலைத்த உன் பிதாவின் செய்கையில், இப்படி ஒரு பூண்டு வளருகிறதா… இதை எல்லாம் நீ கிளறிக்கொண்டிருந்தால், இதற்கு முடிவு உண்டாகுமா! இதற்காக நீ உன் வாழ்நாளை ஸாரமற்று கழிக்க நான் பார்த்துச் சகிப்பேனா! தம்பீ! நீ யாரையோ ஒரு அழகிய பெண்ணை அன்புடன் நேசிப்பதாயும், அவளை ஆஸ்பத்ரியிலேயே வைத்து போஷிப்பதாயும், வேறு நான் கேள்விப்படுகிறேன். இது உண்மையாயிருந்தால், அந்தப் பெண்ணையே உனக்கு மனப்பூர்வமாய் மணம் முடித்து விடலாம் என்று நான் மனக் கோட்டைக் கட்டிக் கொண்டிருக்கையில், மறுபடியும் என்னை மடக்கி, என் வாயை அடைத்து, உன் சன்யாசி ப்ரபாவத்தையே சொல்கிறாயே! பெத்த தாயின் துடிப்பை நீ பார்க்க வேண்டாமா! ஒரு வேளை, அவள் எந்த ஜாதி பெண்ணோ, அம்மா அதற்கு ஒப்புவாளோ என்று நீ சந்தேகிக்கிறாயா! தம்பீ! இதோ பாரு, சத்யமாய் சொல்கிறேன். அந்தப் பெண் யாராயிருக்கட்டும்…”

இதற்கு மேல், அவனால் பொறுக்க முடியாமல், கடகடவென்று சிரிப்பு வந்து விட்டது. “அம்மா! நிறுத்தம்மா! கதை போல் ஸ்வாரஸ்யமான விஷயத்தை, உன்னிடம் யாரம்மா ஜோடனையாய், அழகாய் சொல்லி இருக்கிறார்கள்! இதோ பாரம்மா! அந்த அல்ப விஷயத்தையும் சொல்லி விடுகிறேன் கேளு.

ஆஸ்பத்திரியில் உள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகளில் ஏழைகளும், அனாதைகளும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள்.அதில் ஒரு பெண் திக்கற்றவள்; ஒரு பாட்டி கிழம் இருந்தாளாம், அவளும் இறந்து விட்ட அதிர்ச்சியில் அந்தப் பெண் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டதைச் சகியாது, யாரோ ஐயோ பாவமென்று ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார்கள், ஏன் என்று கேட்பாரற்றுக் கிடந்த அந்த அனாதைக்கு விசித்திரமான வ்யாதி வந்-