71
சாந்தியின் சிகரம்
உண்டாகியது. இதென்ன அதிர்ச்சியான விஷயம். அசைக்க முடியாத சித்த உறுதியுடன் இருந்தவரையா அசைத்து விட்டது. இது உண்மையாக இருக்க முடியுமா! என்னுடைய இரும்பு உள்ளத்தையுமா, இந்த அற்ப தூசிக்குச் சமமான சிற்றின்பப் பேய் அசைத்து விடும்… என்று நினைத்தபடி ப்ரமை பிடித்து நிற்கையில், டெலிபோன் மணியடித்தது.
உடனே, துரைக்கண்ணன் டெலிபோனில் பேசச் சென்றார். பூண்டி பேட்டையிலுள்ள ஒரு ப்ரபலஸ்தர் வீட்டில் காய்ச்சலால் ஒருவர் மகத்தான கஷ்டப்படுவதால், உடனே ஸ்ரீதரனை அனுப்பும்படி சொல்லியதைக் கேட்டதும், இவரே ஸ்ரீதரனை அனுப்பும்படியான அவசரம் உண்டாகி விட்டதால், அரை மனத்துடன் விஷயத்தைக் கூறி அனுப்பினார்.
நாளை வருவதாகக் கூறி, ஸ்ரீதரன் சென்றான். இங்கு கேட்ட விஷயமே, இவன் மனத்தில் ஆழமாகப் பதிந்து, வேலை செய்யத் துடங்கியது. தன்னுடைய ஆழமான உறுதிக்குக் கூட பங்கம் வந்து விடுமோ! என்கிற பயம் அவனை அறியாமல், ஒரு பெரிய பீதி வந்து, மனத்தில் புகுந்து கொண்டுக் கிளறவாரம்பித்தது.
11
தாமோதரன் வரவை அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் உஷா தேவி, தோட்டத்திலேயே நின்றிருந்தாள். தாமோதரன் வரும் கார் ஓசையைக் கேட்டு, அபார சந்தோஷத்துடன் தாவி வந்து, “ஹல்லோ! மிஸ்டர் தாமோதரம்! வாருங்கள்! வாருங்கள்… என்ன கலாட்டா நடந்து விட்டதாமே! பிசாசு என்றாலே எனக்கு அஸாத்ய பயம். அதைக் கேள்விப்பட்டதும், எனக்கு எப்படித்தான் நடுங்கி விட்டது தெரியுமா! உங்களுக்கு அதனால் ஒன்றும் ஆகி விடவில்லையே? இரவு நிம்மதியாகத் தூங்கினீர்களா!” என்று கேட்ட-