உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை மு.கோ. 103-வது நாவல்

76

முதலில் கல்யாணத்தைச் செய்து விட்டுத்தான் மறு காரியம் அவன் பார்ப்பதாக, நேற்று இரவு என்னோடு சண்டை செய்து, என்னிடம் வாக்கும் வாங்கிக் கொண்டான். நம் ஜாதி வழக்கத்தின் படியும், குடும்ப கண்ணியத்தின் படியும் மூத்தவனுக்கு முதலில் விவாகத்தைச் செய்ய வேண்டிய முறையைக் கூட விட்டு விட்டு, உனக்குச் செய்ய சகல ஏற்பாடுகளும் செய்து விட்டான்…”

என்று சொல்லிக் கொண்டிருக்கையில், வெளியில் சுற்றி அலுத்துப் போய், மனத்தில் புதிய குழப்பத்துடன், தன்னறைக்கு வந்து சேர்ந்த ஸ்ரீதரன் தாயாரின் விடுதிக்குத் தற்செயலாய் வரும் போது, தம்பியும் தாயாரும் கடும் சினத்துடன் பேசுவதைக் கேட்டு, வெகு சாந்தத்துடன் உள்ளே வந்து, தம்பியின் தோள்களைப் பிடித்து அன்புடன் ஆட்டி, அவனை உட்காரச் செய்து, பின், “அம்மா! நீயும் ஏன் ஆத்திரத்துடன் பேசி, அவன் மனத்தைக் கலக்குகிறாய்! இந்தக் கடிதத்தினால்தானே இத்தனை விபரீதங்களும் உண்டாகி விட்டன. இதோ! ஆண்டவன் க்ருபையில், நாம் இருவரும் க்ஷேமமாய், அன்பாய் இருந்து நம் தாயாரின் இதயம் பூரிக்கும்படி நடந்தால் போதும்.

இந்த சொத்துக்களைப் பற்றி நீ கவலையே படாதே; எனனுடைய சகலமான சொத்தும் உனக்கில்லாது வேறு யாருக்குப் போகப் போகிறது? உன்னுடைய துணைவி உனக்கு வந்த பிறகு, ஊதாரிச் செலவோ, தாந்தோனித் தனமோ, ஆடம்பரமோ இல்லாது அமரிக்கையாய் குடும்பம் நடத்தும் விதரணையைப் பார்த்துக் கொண்டு, சகல சொத்தையும் உன்னிடமும், அந்த உத்தமியிடமும் ஒப்படைத்துத் தருகிறேன். என்னைப் பற்றிக் கவலையில்லை. என் கைத்தொழில் எனக்குக் கஞ்சி வார்க்கும்; உன்னிடம் இப்போதே சொத்துக்களைக் கொடுத்து விட்டால், உன் சினேகிதர்களால் அதற்கு ஆபத்தே உண்டாகும். ஆகையால், நீ பயப்படாதே. உன்னை நான் காலையில் கேட்டபடி, பதில் சொல்லு. உனக்காக அம்மாவைத்