பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சான்றோர் தமிழ்

சிலப்பதிகார ஆங்கில மொழி பெயர்ப்பு முழுமையும் மு. இராகவையங்கார் அவர்களின் துணை கொண்டே உருவம் பெற்றது.

மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி முடிவு களைப் பற்றிக் கூறும்போது எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்,

“பெரும்பாலும் ஆசிரியரது கருத்துக்கள் கொள்ளத்
தக்கனவாகவே உள்ளன”

என்கிறார். (தமிழ்ச் சுடர் மணிகள்; ‘மு. இராகவையங்கார்.’ ப. 397). இவர் தம் நடையைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘தெளிந்த நடை’ என்பர்.

“பாண்டித்திய படாடோபமென்பது இவர்கள் நடை
யில் சிறிதும் இல்லை-இவர்கள் உரை நடையிலேயே ஓர் அபூர்வமான கனிவும் இனிமையும் வெளிப்படுகின்றன.”

(எஸ். வையாபுரிப் பிள்ளை:
தமிழ்ச்சுடர் மணிகள் : ப. 397,)

பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள் நடையில் மட்டும் எளிமை உடையவர் அல்லர். வாழ்க்கையிலும் எளிமையைக் கடைப் பிடித்தவர். தம்முடன் பணியாற்றுப வர்களுடன் இனிமையாகப் பழகும் ஆற்றலும் மிக்கவர், இதனை அவருடன் பணியாற்றிய ஆர். வீரபத்திரன் அவர்கள் கூற்றால் தெளியலாம்.

‘சேரவேந்தர் செய்யுட் கோவையில் முதற்பகுதி
அச்சாகி முடிந்த தறுவாயில் அந்நூல் பற்றிப்
பேராசிரியரிடம் நான் கூறியிருந்த செய்தி ஒன்று
நினைவிருக்கிறது. நூலில் ஆங்கில முன்னுரை,
தமிழ் முன்னுரை, சேர வேந்தர் சரித்திரச் சுருக்கம்
முதலிய பல செய்திகள் இடம் பெற்றிருக்க,