பக்கம்:சாமியாடிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

9


   "வேற எதையாவது பேசுங்க. தெனமும் பொழப்பப் பத்தியே பேசிப் பேசி அலுத்துப் போச்சு. இப்போ புதுசா வந்திருக்கிற சினிமாவுல எது நல்லா இருக்காம்?"
   "நம்ம கோணச்சத்திரத்துக்கு வார படமெல்லாம் டப்பாப் படம்தானே.”
   "ஆமாமா. அந்தக் கொள்ளயில போவான் தியேட்டர்ல எந்தப் படம் வந்தாலும் அது நட்டுக் கழண்ட படமாகத்தான் இருக்கும்."
   "நான் தென்காசியிலயும் திருநெல்வேலியிலயும் ஒடுற சினிமாவச் சொன்னேன்.”
   "நீதான் பாத்துட்டு வந்து சொல்லேன். அங்க போறது ஒனக்கு ஒண்ணும் புதிசில்லியே மயினி."
    அலங்காரி, வெள்ளை வெளேர் முத்தம்மா தன்னைக் கிண்டல் செய்வதாக நினைத்து, திட்டப் போனாள். இதற்குள் ஒரு எட்டு வயதுப் பயல் எங்கிருந்தோ வந்தவன் போல் வந்தான். ஒரு ஆல விழுதை எட்டிக் குதித்துப் பிடித்தபடி அங்கும் இங்குமாக ஆடினான். தாயம்மாவின் தலைக்கு மேலே போகும்போது, கால்களைச் சுருட்டிக் கொண்டான். தாயம்மா பயத்தில் தலையை நிமிர்த்திய போது, அவன் காலில் அவள் தலைமுடி சிக்கி, அவளைத் தரையோடு தரையாக இழுத்துப் போட்டது. உடனே அந்தப் பயல், விழுதை விட்டுவிட்டு, விழுந்தடித்து ஒடிய வேகத்தில், தாயம்மாவின் பீடித்தட்டு குப்புற விழுந்தது. இலைகள் பட்டம் பறப்பதுபோல் ஆகாயத்தில் பறந்தன. பீடித் துகள்கள் மண் தூள்களுடன் கலந்து மாயமாயின. தாயம்மா ஒப்பாரியிட்டாள்.
   "ஐயோ... என் அறுபது வண்டலு இலயும் போச்சே. பீடிக்கடைக்காரனுக்கு என்ன சொல்லுவேன். ஏது சொல்லுவேன். காஞ்சான் மகன் பண்ணுன வேலையைப் பாருங்க... எலே நாய்க்கு பெறந்து நாயே. இப்போ ஒடிட்டாலும், அப்புறம் வரத்தானே போறே."
     அந்தப் பயலைப் பிடிப்பதற்காக, நான்கு பெண்கள் எழுந்து, அவர்களில் மூவர் சேலைகளை இறுக்கிக் கட்ட, மூவரில் ஒருத்தி,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/11&oldid=1412575" இலிருந்து மீள்விக்கப்பட்டது