பக்கம்:சாமியாடிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

சு. சமுத்திரம்

அந்த வயலைவிட்டு அடுத்த வயல் சென்ற கோலவடிவு திரும்பிப் பார்த்தாள். துளசிங்கம் வந்து கொண்டிருந்தான்.வேட்டி சட்டையோடு அல்ல. பொம்மைச் சட்டையோடும், பாவாடை மாதிரி. அகலமான பேண்ட்டோடும். கோலவடிவு அவனுக்குப் பயந்து நடப்பவள் போல் நடந்தாள். பிறகு இன்னொரு வாய்க்காலுக்கு வந்ததும் பதுங்கி நின்றாள். சே. காலெல்லாம் ஒரே சகதி. வாய்க்காலுல காலக் கழுவனும். எப்படிஅப்புது. எம்மாடி.

கோலவடிவு, கால்களைக் கழுவிக் கொண்டிருக்கும்போது, துளசிங்கம் வந்துவிட்டான். அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு, திரும்பிப் பார்க்காமலே நடந்தான். கோலவடிவு கழுவிய ஒரு காலோடும், கழுவாத இன்னொரு காலோடும் ஒடினாள். அவன் முகத்தைப் பின்னோக்கிச் செலுத்துவதற்காக இருமினாள். செருமினாள். அவன் திரும்பியதும் நாணத்தோடு நின்றாள். அவன் மீண்டும் நடக்கப் போனான். அவள், வார்த்தைகளால் இடைமறித்தாள்.

"அலங்காரி அத்தையக் காணோம."

"கூட்டிட்டு வா காட்டுறேன். பாசம் ரொம்பத்தான் பொங்குதோ..."

"ஒம்ம கையி..."

"ஏன் முழுசா உடையலன்னு கேட்கியா? கையில பணமில்லாமலே சிமெண்ட் கேட்டு வம்புக்கு வந்த அண்ணன் கையில ரூபாய் திணிச்சத நான் மறக்கல. எம்மாளு ஒனக்குக் கோடி கும்பிடு. இந்த வம்பு தும்புக்கு மூலமே நீதான். எங்க அலங்காரி சித்தி வியைாட்டுக்குச் சொன்னத நீ பெரிசு படுத்தாம இருந்திருந்தால் எனக்கு கையும் ஒடிஞ்சிருக்காது. ஒங்கண்ணாவுக்கு காதும் கிழிஞ்சிருக்காது. இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ.. ஒன்ன நல்ல பொண்ணுன்னு நெனச்சேன் பாரு. என்னை."

துளசிங்கம், அவள் இதயத்தை இட்டு நிரப்பாதது போல், சொல்ல வந்ததையும் சொல்லி முடிக்காமலே வேறு பக்கமாக நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/116&oldid=1243574" இலிருந்து மீள்விக்கப்பட்டது