பக்கம்:சாமியாடிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

சு. சமுத்திரம்

தோளில் கிடந்த அந்த சேலை போல் கண்ணிரால் ஈரம்பட்டு நிலைப்படியில் சாய்ந்தாள். அப்பா சம்மதிக்க மாட்டார். ஒருவேளை அப்படி சம்மதிச்சுட்டால் வருமுன் காக்கனுமே.

"அலங்காரி அத்தே. நீதான் என்னைக் காப்பாத்தணும்."




11

கோலவடிவு குமுறியபடியே நின்றாள்.

அக்னி ராசாவுக்கு, தான் மனைவியாகும் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த ஆத்திரத்திலும், ஆவேசத்திலும் தனது இடது தோளை வலக்கரத்தால் பிடித்து அழுத்தினாள். அந்தத் தோளில் தொங்கிய ஈரப்புடவை, கசங்கிப் போய் அவளுக்காகக் கண்ணிர் சிந்துவது போல் தண்ணீர் சொட்டுச் சொட்டாக அவள் கை வழியாக உருண்டோடியது. அவளுக்கு, இப்போதே அலங்காரி அத்தையின் வீட்டுக்குப் போய் அவள் தோளில் கை பின்னி, மார்பிலே தலைபோட்டு, அழவேண்டும் போல் இருந்தது. அதற்காகத் திரும்பக்கூடப் போனாள். அது எப்டி முடியும்? அலங்காரி அத்தை வீட்டுக்கு ஆம்புளைங்க போனால் சந்தேகம் வராது. அத்தனையும் இடக்கு மடக்குங்க.. ஆனால் ஒரு பொம்பிளை போனால் சந்தேகம் வரும். அந்த அளவுக்குக் கொடிகட்டிப் பறக்கும் அத்தை வீட்டுக்கு, இப்போ மட்டுமல்ல எப்போதும் போக முடியாது. ஆனால் அத்தைய பார்த்துத்தான் ஆகணும்.

கோலவடிவு வீட்டு வாசல் படியைத் தாண்டப் போனாள். அதற்குள் சிறிது மெளனப்பட்ட வீட்டில் அம்மாவின் சத்தம் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/118&oldid=1243578" இலிருந்து மீள்விக்கப்பட்டது