பக்கம்:சாமியாடிகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

131

சாமியாடிகள் 13?

வெளியே காதுகேட்கும் தொலைவில் கூடிக்கூடி நின்றார்கள். அவர்களுக்கும் ஒரு. எரிச்சல். ஒரு ஆசை. அதென்ன. எல்லா வருஷமும். முதல் கொடை. கரும்பட்டையான். கொடை.

'குடிமவன் குத்தாலிங்கம் பிரித்துக் கொடுத்த நான்கு வெற்றிலைகளைக் குதப்பிக் கொண்டிருந்த கூட்டத்தின் முகப்பில் இருந்த எலி டாக்டர், 'பால் குடிக்கத் தெரியாத அப்பாவி பூனை மாதிரி கேட்டார்.

"சரிப்பா எப்போ கொடையை வச்சுக்கலாம்."

"இது என்ன பெரியய்யா புதுக்கேள்வி. இந்த வெள்ளில வரின்னா அடுத்த வெள்ளிலதான. கொடை. இதுல ஏன் சந்தேகம் வருது."

காஞ்சான் விளக்கமளித்தார். "சந்தேகம் ஒனக்கு வர்ல. ஆனால் சில பயலுவளுக்கு இருக்கு. அதனால தான் எலி டாக்டர் அண்ணாச்சி கேக்காவ..."

'ஏய். யாரும் சபையில் வக்கனப்பேர பேசப்படாது. நெசப்பேரத்தான் சொல்லணும்."

"ஆமா.. எலி டாக்டர் தாத்தாவோட நெசப்பேரு என்ன.." "சின்னப்பய மவனுகளா. சும்மா இருங்கடா. சரி. அடுத்த வெள்ளில கொடை. அப்படித்தானே."

"கரும்பட்டையான் கூட்டம் நமக்கு வேற யாருமுல்ல. கொண்டான் கொடுத்தாக அதோடு காளியம்மா மாடனுக்குத் தாயி. தாய்க்குப் பிறகுதான் மகன்."

'காளியம்மனுக்கு சுடல மவனோ இல்லியோ. ஒங்கம்மா பொறந்தது கரும்பட்டையான் குடும்பம். ஒனக்கு தாய்மாமன் குடும்பம். உசத்தியாப் போச்சா..?"

"ஏல உட்காருல. ஒன் மாமன் மச்சான் உறவ வீட்ல வச்சுக்க. இது சபை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/133&oldid=1243600" இலிருந்து மீள்விக்கப்பட்டது