பக்கம்:சாமியாடிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

சு. சமுத்திரம்

134 சு. சமுத்திரம்

"அலங்காரி சித்தி சொன்னதுல தப்பில்ல. சித்தி நீ ஏன் போறே. இங்கேயே நில்லு. அடுத்த வெள்ளில கொடை கொடுக்கோம். சரிதானே."

"ஒரு வார்த்த அவங்க கிட்டயும்." "நாம என்ன வேலைக்காரனுவளா.. எசமான்க கிட்ட உத்தரவு

கேட்க."

"ஒரே நாள்ல ரெண்டு கொடைக்கு கூட்டம் சிதறும். அடிதடி கூட வரும்."

"அதை நான் பார்த்துக்கிடுறேன். நம்ம மேல ஒரு தூசி துரும்பு விழாது. அப்புறம்."

"அப்படின்னா சரிதான்."

துளசிங்கம் மீண்டும் உட்கார்ந்து அப்பாவைப் பேசவிட்டான். துளசிங்கத்திடம் பலருக்குப் பயம். இவன் கிட்டதான் உரத்த வாங்கியாகணும். இவனோ, ராமய்யா வயலப் பண்ணுவது மாதிரி பண்ணிடப்படாது. அதோட இவன்கிட்டே கடனேன்னு வாங்குனாலும் கடனிலயே வாங்கலாம். எல்லாத்துக்கும் மேல. நம்ம பயல். இளவட்டப் பயலுவல்லாம் இவன் பக்கம். இந்தக் குடும்பத்துல. முதல் தடவையா. நாகரீகம் தெரிஞ்ச நம்ம பயல்.

"சரிப்பா. வரி எவ்வளவு போடலாம்.?”

"அறுபது ரூபாய்."

"போதுமா..?” "போதாட்டா என் மகன் துளசிங்கம் இருக்கான்."

"சபையிலயாவது நான் இருக்கேன்னு சொல்லேன் டாக்டர் அண்ணாச்சி. தலை இருக்கும்போது வால் ஆடலாமோ."

"வால்தான் ஆடும் என்பது போல், துளசிங்கம் மீண்டும்

எழுந்தான். இலைதழை உடையோடு இதுதான் தீர்ப்பு என்பது மாதிரி பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/136&oldid=1243603" இலிருந்து மீள்விக்கப்பட்டது