பக்கம்:சாமியாடிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

சு. சமுத்திரம்

140 சு. சமுத்திரம்

அலங்காரி, செம்பட்டையான் வட்டத்தை உடைத்து, உள்ளே போய் ஒவ்வொரு செம்பட்டையானையும் பின்னால் தள்ளிக் கொண்டிருந்தாள். பலர் அதுதான் சாக்கு என்று அவள் தொடுமுன்னாலயே பின்னால் போனார்கள். சிலர், அவள் மீதுள்ள பழைய கோபத்தை மனதுக்குக் கொண்டு வந்து, தள்ளியவளையே தள்ளினார்கள்.

இந்தச் சமயத்தில், ஐம்பது பேர் மேற்குப் பக்கத்தில் இருந்து ஒடி வந்தார்கள். காத்துக்கருப்பன்கள். அக்கினி ராசாவின் சித்தப்பா பற்குணம், அந்த கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் போல, முன்னால் நின்றார். அதற்குள் அந்த, காத்துக்கருப்பன் கூட்டம் வட்டம் போட்ட செம்பட்டையான் கூட்டத்திற்கு வெளியே ஒரு வட்டம் போட்டது. இந்தக் காத்துக்கருப்பன்கள் அடிதடி திலகங்கள். அடித்துவிட்டுத் தான் பேசுவார்களே தவிர, பேசிவிட்டு அடிக்க மாட்டார்கள். ஊர்விட்டு ஊர் போய் அடித்துவிட்டு, செறு வென்று திரும்புவதிலும் முரடர்கள். பற்குணம் தலைப்பாவைக் கட்டிக் கொண்டே கத்தினார். "தனியா மாட்டிக்கிட்டா இப்படியா. அவங்கள கோடுபோட்டு வைக்கது மாதிரி வைக்கது, ஏய் துளசிங்கம். அவங்கள விடுடா. விடுறியா. இல்ல விட வைக்கணுமா..."

துளசிங்கம் சும்மா இருந்தபோது, காஞ்சான் பதிலளித்தார். "என்ன பற்குணம். விவகாரம் தெரியாமப் பேசுற. மெனக்கெட்டு எங்கள அடிக்கிறதுக்குன்னே இங்க வந்து வம்பு செய்தானுவ. இவனுவள அடிச்சூ கிடத்திட்டது மாதிரி பேசுதியே. இந்த இருபது பேரையும் மலத்திப்போட எவ்வளவு நேரமாவும்? செய்தோமா..."

"அப்டிச் செய்தால் பின்னால என்ன நடக்குமுன்னும் யோசிக்கனுமுல்லா"

"தெருவிட்டு தெரு வந்த பிறவு அந்த திமுருக்கு அடங்க முடியுமா. அப்படிப்பட்ட உயிருதான் எதுக்கு."

"துளசிங்கம்! பெரியவிய பேசும்போது. நீ கம்மா இரு சரி. இப்போ அவங்கள விடப்போறியளா..? இல்லியா..?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/142&oldid=1243652" இலிருந்து மீள்விக்கப்பட்டது