பக்கம்:சாமியாடிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

145

சாமியாடிகள் 145

கரும்பட்டையான் மூஞ்சுகளா.. என் நிலையில. ஒங்க அம்மாரும், பொண்டாட்டிமாரும் இருந்தா. அவளுவளும். என்னை மாதிரிதான் இருப்பாளுவடா. எனக்கு காலமே. காலனா வந்தது. ஒங்களுக்குத் தெரியுமாடா.

துளசிங்கம், பேசுவதை, ஆற்றுப்படையாக கேட்டுக் கொள்வதற்காக, சிந்தனையோ. நிபந்தனையோ. எதையோ ஒன்றை தடைசெய்துவிட்டு, உன்னிப்ப்ாய்க் கேட்ட அலங்காரி, இப்போது எக்காளமாகப் பேசினாள். குறுஞ்சிரிப்பும்-கொள்கை முழக்கமுமாய்,

"எதுவும் வேண்டாம். சுடல மாடன். எனக்கு சொல்லிக் கொடுத்ததை, நான் ஒங்ககிட்ட சொல்லுவேன். நீங்க. நான் சொன்னத செய்தாப் போதும். காத்துக்கருப்பன்களையும், அந்த கரும்பட்டையான்களையும், ஒரே கத்திரியால் மொட்டை அடிச்சுடலாம்."

ஆண்கள், அலங்காளியை அதிசயமாகப் பார்த்தார்கள். இதுவரை அவளை இளக்காரமாகப் பார்க்கும் செம்பட்டையான் தாய்க்குலம், அவளைத் தலைவியாக ஏற்றுக் கொண்டதுபோல் அண்ணாந்துப் பார்த்தது.

14

கட்டிலில் கால்போட்டு உட்கார்ந்திருந்த பழனிச்சாமி, பங்காளிகள் சொல்வதை வழக்காளியாய் இருக்கும்போது எப்படிக் கேட்பாரோ, அப்படி எந்தவித உணர்வையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் கேட்டார். காத்துக் கருப்பன்கள் தலையிட்டதைச் சொல்லும்போது மட்டும், மோவாயில் ஊன்றிய கையை எடுத்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். எல்லோரும் சொல்லி முடித்ததும், இன்னும் ஏதாவது இருக்கிறதா என்பதுபோல் அவர்களைப் பார்த்து விட்டுச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அவர் வாயையே எல்லோருடைய கண்களும் மொய்த்தன. அவரும் நிதானமாகக் கேட்டார்.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/147&oldid=1243660" இலிருந்து மீள்விக்கப்பட்டது