பக்கம்:சாமியாடிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

15

சாமியாடிகள் 15

வாடாப்பூ எதேச்சையாகச் சொல்வதுபோல் சொன்னாள்.

"ஏன் ரெண்டு பேரும் சொல்லிவச்சது மாதிரி நிக்கிய. ஒக்காருங்களேன். நாங்க படுற பாட்டைத்தான் கொஞ்சம் பாருங்களேன். ஏழா சந்திரா, அந்தப் பாயைத் தா. துளசிங்கம் உட்காரட்டும். கோலவடிவு நீயும் உட்காரேன்."

அலங்காரியை வரம்பிற்கு மீறித் திட்டிவிட்டோமோ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டதால் தப்புத் தப்பாய் பீடி சுற்றிய சந்திரா, அவளுக்கு சலுகை காட்டுவது போல், அந்த இரண்டு சதுரடிப்பாயைத் துளசிங்கம் நின்ற பக்கமாக வீசினாள். அவன், உடனே அதை எடுத்து ஆலமரக் கிளைபோல் நீண்ட வேரில் மடித்துப் போட்டு உட்கார்ந்தான். கோலவடிவு அப்படியே நின்றாள்.

அலங்காரி புதிய வரவுகளான இருவரையும் நோட்டமிட்டுப் பார்த்தாள். இரும்பைச் சிலையாக்கி, அதில் எண்ணெய் தேய்த்துவிட்டது போன்ற துளசிங்கத்தை, துள்ளிவிழப் போகும் ஆமணக்குக் செடி ஒய்யாரத்தில் தோன்றிய கோலவடிவுடன் ஒப்பிட்டுக் கொண்டாள். அவனின் முடிகுறைந்த வட்டக்கிராப்பையும், அவளின் கோதி முடிந்த மல்லிகைப்பூ கொண்டையையும், மனதுக்குள் ஒன்று சேர்த்து வைத்துப் பார்த்தாள். ஒரு அழுத்தத்தை, ஒரு மென்மையுடன் இணைத்துப் பார்த்ததில் அவளுக்குக் கணவனால் கிடைக்காத சுகம் கிடைத்தது. இப்போது, தன் மனதில் தோன்றிய சபதத்தைக்கூட மறந்து, அந்த இருவரையும் இயல்பாக இணைத்துப் பார்த்து ஆனந்தப்பட்டாள். சந்திாா, அலங்காரியை தாஜா செய்வதுபோல் கேட்டாள்.

"அத்த, ஒங்க மச்சான் மகன் ஊமையா?”

அலங்காரிக்கு இப்போது மனம் லேசாய் சுகப்பட்டது. அவளும் இயல்பாகவே திருப்பிக் கேட்டாள்

"ஆமாண்டி என் மருமவளே. அதே கேள்விய அத்த திருப்பிக் கேக்கேன். ஒன் பெரியப்பா மகள் கோலவடிவுக்கு வாய் பேச வராதோ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/17&oldid=1243290" இலிருந்து மீள்விக்கப்பட்டது