பக்கம்:சாமியாடிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

சு. சமுத்திரம்


"அடக் கடவுளே. என்னதான் ஆனாலும். என் நிலைமை உனக்கு வர விடமாட்டேன். கருக்கலுல பருத்திக் காட்டுப் பக்கமா வா. அக்கினி ராசா ஒனக்கு மாப்பிள்ளையா வரமாட்டான். கலங்காமப் போ.. என் ராசாத்தி. நான் எதுக்கு இருக்கேண்டி..?”



20

செம்பட்டையான் சுடலைமாடன் கோவில், நான்கு பக்கமும் மதில் சுவர்கள்ால் மடக்கப்பட்டு நடுப்பக்கம் பெரிய வாசலைக் கொண்டது. ஆனாலும் இந்தக் கோட்டைச் சுவர்களையைம் மீறி, கோவிலுக்குள் உள்ளே சாமி பிம்பங்கள் வெளியே நன்றாகவே தெரிந்தன. குள்ளமான மதில் சுவரின் உள்ளேயும், வெளியேயும் வெள்ளையடிக்கப்பட்டு, அந்த சுவர் முழுக்க வெள்ளை சிவப்புக் கோலப்பட்டைகள் செங்குத்தாக மாறி மாறித் தொங்குவது போல் தெரிந்தன. இந்த செவ்வகக் கோவிலுக்குள் மேற்குப் பக்கம் மூன்றடி உயரமான பீடத்தில் சுடலைமாடன் கூம்பு வடிவச் சுவராகக் காட்சி தந்தான். நான்கு பக்கமும் முக்கோணமாய், உச்சியில் சதுரமாக முடிந்த மண் பிம்பம். அந்த மண் வடிவிற்கு வெள்ளையடிக்கப்பட்டு, அந்த வெள்ளையிலேயே விபூதி பூசப்பட்டதால், அது சரியாகத் தெரியவில்லை. ஆனால் சந்தனமும் குங்குமமும் பளிச்சிட்டன. சாமியின் பாதத்தில் பயங்கரமான வெட்டரிவாள். மாடனின் ஆறடி பிம்பத்தின் இரண்டு பக்கமும் வில் மாதிரியாக கம்பு அதில் சர விளக்குகள் இணைக்கப்பட்டிருந்தன. மாடனுக்கு அக்கம் பக்கம் நான்கைந்து பிம்பங்கள். வடக்கு மதில் கவரை ஒட்டினாற்போல் இரண்டு சிறிய கட்டிடங்கள். அவற்றில் ஒன்றில் மாடத்தி. இன்னொன்றில் பத்திரகாளி. இருவரும் சிலைவடிவங்களில் இருக்கிறார்கள். தெற்குப் பக்க மதில் கவரை ஒட்டி ஏழெட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/186&oldid=1243720" இலிருந்து மீள்விக்கப்பட்டது