பக்கம்:சாமியாடிகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

சு. சமுத்திரம்

196 சு. சமுத்திரம்

"நீயும் எங்ககூட வாயேன் சித்தி."

"நீங்க ஒடிப்போறதால ஆடிப்போற ஊரை சமாளிக்க நான் இருக்கணுமே.”

அலங்காரியும் துளசிங்கமும் பள்ளப் பகுதியான பருத்திக் காட்டைத் தாண்டி, மேட்டுப் பகுதியான சோளத் தோட்டத்தின் பக்கமாக வந்தார்கள். அலங்காரி, ஊருக்குள் மறைந்து கொண்டிருந்த பற்குணத்தையும், அவரோடு சென்ற ராமசுப்புவையும் பார்த்துக் கொண்டே நின்றாள். சோளப் பயிருக்குள் போகப் போன துளசிங்கத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள். பிறகு மெல்லக் கூவினாள்.

"கோலவடிவு. ஒனக்கு நல்லகாலம் வந்துட்டுடி. என் ராசாத்தி. எந்தப் பக்கமா நிக்கே..?"

அந்தப் பெரிய சோளத் தோட்டத்தில் நடுப்பக்கத்தில் நான்கைந்து சோளத் தட்டைகள் வளைந்து வளைந்து ஆடின. வா. வா. என்று வளைந்தன.

துளசிங்கத்தைப் பார்த்த கோலவடிவால், தாங்கமுடியவில்லை. தாளமுடியவில்லை. விக்கலும் வெடிப்புமாய் அழுதாள். முகத்தைக் கரங்களால் மூடியபடியே அழுதாள். அவனைப் பார்த்து முகம் படர்ந்த கர விரல்களை விலக்கி, வெட்கத்தோடு சிரித்து சிணுங்கியவள் இப்போது வெட்கமற்றவள் போல் அழுதாள். அவளைப் பார்க்க துளசிங்கத்திற்கே என்னவோ போலிருந்தது.

கோலவடிவின் பக்கம் அலங்காரி வந்து நின்று கொண்டாள். அவள் தலையைச் சாய்த்து, தன் தோளிலே போட்டுக் கொண்டாள். பிறகு, அவளைத் தனக்கு எதிராகத் திருப்பி வைத்துக் கொண்டு, எந்தவித பீடிகையும் போடாமலே வெட்டொன்று துண்டு ரெண்டாகப் பேசினாள்.

"எனக்கு நீட்டி முழக்கிப் பேச நேரமில்ல கோலம். ஒனக்காவ உயிரைக் கொடுக்கவும் இவன் தயாராயிட்டான். ஒன்னை அக்னி ராசாவோட சேர்த்து பாக்கவே இவனால முடியல. அதனால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/198&oldid=1243742" இலிருந்து மீள்விக்கப்பட்டது