பக்கம்:சாமியாடிகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

சு. சமுத்திரம்

198 சு. சமுத்திரம்

போகலாம். கோலத்துக்கு அலங்கோல மாகணுமுன்னு தலைவிதி இருந்தால். நான்தான் என்ன செய்ய முடியும். நீதான் என்ன செய்ய முடியும். புறப்படுடா..."

அலங்காரி துளசிங்கம் கையைப் பிடித்து இழுத்தபடியே நடக்கப் போனாள். கோலவடிவு கையில் இருந்த கதிரை விட்டுவிட்டு, அலங்காரியின் தோளைப் பற்றினாள். துவண்ட முகத்தோடு பேசினாள்.

"அம்மன் கொடைக்குப் பிறவு ஆற அமர."

"என்னம்மாளு. நீ. நாங்க என்னமோ ஒனக்கு உதவுறதாய் நெனச்சால், நீ எங்களுக்கு உதவுறதாய் நெனைக்கே அம்மன் கொடையில என்ன நடக்கப் போவுதோ.. எது நடக்கப் போவுதோ. விவகாரம் கோர்ட்டுக்குக்கூட போவும். அப்போ கல்யாண மேடைக்கு போக முடியுமா. அதுவரைக்கும் இவனை ஒங்க ஆட்கள் உயிரோட விட்டு வைக்கப் போறாங்களோ. இல்லியோ. எது சொன்னாலும் இப்பவே சொல்லு."

கோலவடிவு, துளசிங்கத்தையே பார்த்தாள். அய்யய்யோ. இவர வெட்டிக் கொன்னாலும் கொன்னுடுவாங்களோ.. எனக்காவ இத்தன அமளியிலயும் உயிருக்கு ஆபத்தக்கூட நினைக்காம. இங்க வந்திருக்கிற இவர அம்மன் கொடைக்குப் பிறகு அடியோட பார்க்க முடியாமக் கூட போவுமோ. அதுக்காவ இவரு பின்னால நான் ஒட முடியுமா. இதுக்கா அப்பா என்ன வளத்தாரு இதுக்கா அம்மா என்னப் பெத்தாள். ஆனால் இப்பவே இவர பிரிய எனக்கு மனம் வரமாட்டாக்கே. இந்தக் காட்டுலயே இவரோடயே இந்த கணத்துல இருந்தே இருக்கலாம் போல மனம் துடிக்குது. இவர விட்டுட்டு

என்னால.

"கோலம், அத்தைய நீ தப்பா நெனச்சாலும் சரி. நீ எப்பவோ எடுக்கப் போற முடிவு இப்பவே எடுத்துடு. இல்லன்னா. ஒனக்கே

ஒரு முடிவு கட்டிடுவாவ. அக்னிராசாவ கட்டிட்டு. அப்புறம் அத்தைகிட்ட வரப்படாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/200&oldid=1243744" இலிருந்து மீள்விக்கப்பட்டது