பக்கம்:சாமியாடிகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

சு. சமுத்திரம்

222 சு. சமுத்திரம்

"நான் சொல்லுறதையும் கேளும் ஒம்மை நம்பி வந்தவள் நான். என் உடம்பு மட்டுமில்ல, இந்த நெஞ்சுக்குள்ள துடிக்கிற ஒவ்வொரு துடிப்பும் ஒமக்கு சொந்தம். என் நெனப்பே ஒமக்குத்தான். என் நடமாட்டமே இனும ஒம்மாலதான். ஆனால் எல்லாம் கழுத்துல தாலி விழுந்த பிறகுதான். சரி. வெளில போயி படும். நீரு போlரா. நான் போகட்டுமா..?"

துளசிங்கம் கதவை மறித்த அவளை, எதேச்சையாகவோ கோபத்தாலோ தள்ளியதில் கோலவடிவு கீழே விழுந்தாள். அவள் யோசித்தபடியே எழுந்தபோது, பாட்டி உள்ளே வந்தாள்.

"அந்த குலமானு சொல்லுறதைக் கேளுடா. இனிமேல் அவள் கழுத்துல நீ மஞ்சள் கயிற கட்டும்போது தான் ஒன் கையி அவள் மேல படனும். இதுக்கு முன்னால் படப்படாது. அதுக்கு முன்னால. அவள் சம்மதிச்சாலும் நான் சம்மதிக்க மாட்டேன்."

துளசிங்கம் பாட்டியைக் கோபமாகப் பார்த்தபடியே, வெளியே வந்து, முற்றத்தில் முன்னும் பின்னுமாக நடந்தான். செக்கு மாடு மாதிரி, சுற்றிச் சுற்றி வந்தான்.

கோலவடிவு யோசித்தாள். ஏன் இப்டி முரட்டுத்தனமாத் தள்ளினாரு? கீழே விழுந்தவளைக்கூட தூக்கி விடல?


26

ஆடிவெள்ளியைப் பிரசவித்துக் கொண்டிருந்த வியாழனின் நடுநிசி.

இருளே ஆகாயமாக இருந்தபோதிலும், சட்டாம்பட்டி காளியம்மன் கரும்பட்டையான்களும், கடலைமாடச் செம்பட்டையான்களும், ஏவிவிட்ட வாணங்கள், அந்த ஆகாயத்தின் எரி நட்சத்திரங்களாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/224&oldid=1243777" இலிருந்து மீள்விக்கப்பட்டது