பக்கம்:சாமியாடிகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

235

சாமியாடிகள் 235

கொண்டிருந்த செம்பட்டையான்களும் லைலாவையும், அவள் காதலர்களையும் கொண்டு வந்தவர்களும் எழுந்தார்கள். ஆரம்பத்தில் கரும்பட்டையான்களும் ஏதா தங்களுக்குள் விவகாரம் நடத்துவதாகத்தான், செம்பட்டையான்கள் நினைத்தார்கள். ஆனால், பேச்சியம்மா, அலங்காரி மேல் மண்ணைப் போட்டபோது, செம்பட்டையான்கள் உஷாரானார்கள். போதாக் குறைக்கு, அலங்காரி, செம்மண் கோலத்தோடு, வாயிலும் வயிற்றிலும் அடிப்பதை நன்றாக கேட்க முடியவில்லையானாலும், பார்க்க முடிந்தது. செம்பட்டையான்களுக்கும், ஆக்ரோஷம் ஏற்பட்டது. அந்தக் கோவிலில் இருந்து, கரும்பட்டையான்களை நோக்கி ஓடி வந்தார்கள். பாதி வழி வந்த பிறகுதான், துரோணர் மாதிரி ஆயுத மேந்தாமல் போவது தெரிந்தது. உடனே கோவிலுக்குள் இருக்கும் சூலாயுதம், வேலாயுதம் ஆகியவற்றை எடுப்பதற்காக அவர்கள் திரும்பியபோது, கரும்பட்டையான்கள் வீசிய கற்கள் அவர்களின் முன் பக்கமும், பின்பக்கமும் விழுந்தன.

அவ்வளவுதான். கற்காலம் துவங்கிற்று.

இருபக்கங்களில் இருந்தும், கற்கள் ஏவுகணைகளாயின. சின்னச் சின்னக் கற்கள் வேகவேகமாகவும், பெரிய பெரிய கற்கள் பயங்கர பயங்கரமாகவும் விழுந்தன. அலங்காரியை நோக்கி கல் வந்தபோது, அவள் "அய்யோ போனனே" என்று அங்குமிங்குமாய் ஓடினாள். சில கற்கள் மரங்களில் பட்டு பின்வாங்கின. பல கற்கள் மரங்கள் வழியாக முன்வாங்கின. இருபக்கமும் மேலோங்கிய கற்கள், வில் வளைவாய் வளைந்து கீழோங்கின. 'வேண்டாம்பா... வேண்டாம்பா.." என்ற ஊர்ச்சத்தங்கள். "எறில. வேகமா எறில” என்ற ஊக்குவிப்புச் சத்தங்கள். சம்பந்தமில்லாதவர்கள் அங்குமிங்குமாய் ஒடிப்போய் மரங்களின் பின்னாலும், சுவர்களின் பின்னாலும் பதுங்கிக் கொண்டார்கள். சம்பந்தப்பட்டவர்களோ, சடுகுடு ஆடுவதுபோல் முன்னாலும் பின்னாலும் நகர்ந்து எதிரிகள் குறிபோடும் கற்களுக்கு அப்பால் நகர்ந்து நகர்ந்து கற்களை எடுத்து வீசினார்கள். சில சின்னப் பயல்களும், கல்விச்சில் கலந்து கொண்டார்கள். பெண்கள் தத்தம் ஆட்களுக்கு கற்களை எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/237&oldid=1243800" இலிருந்து மீள்விக்கப்பட்டது