பக்கம்:சாமியாடிகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

சு. சமுத்திரம்

242 க. சமுத்திரம்

கோவிலில் இருந்து நாங்கபாட்டுக்கு பேசிக்கிட்டு வந்தோம். கோலவடிவு, இங்க ஒடி வந்தது பழனிச்சாமி வீட்டுக்கு தெரிஞ்சுட்டு. போலுக்கு. திருமலைப் பயல் ஓடிவந்து என்னை மிதிமிதின்னு மிதிச்சு கீழே தள்ளுனான். இந்த முழுத்த பொம்புளய் பிள்ளய ஜாக்கட்ட பிடிச்சு. அய்யோ எப்டிச் சொல்லுறதுடா. எப்டிச் சொல்லுறது. அழாதழா புஷ்பம்."

துளசிங்கம் பொறுமை இன்றி முந்தினான்.

"இதுக்கு மேல நீ எதுவும் சொல்லாண்டாம். இன்னைக்கு ஒண்ணு அவன் சாகணும். இல்லன்னா நான் சாகணும்."

"குறயும் கேளுடா. ஊர்க்கூட்டம் திரண்டுது. அதுக்குள்ள நம்ம ஆளுவளுக்கும் அவங்களுக்கும் ஒரே கல்லெறி. காஞ்சான் மச்சான் முதுக நிமுத்த முடியாம கிடக்காரு ஒங்கப்பாவுக்கும் நெத்தில காயம். துடிச்சிட்டு கிடக்காரு. இதோ பாரு. என் வாய திருமலைப் பய என்ன பாடு படுத்தியிருக்கான்னு."

"பாட்டி ஒன் கையால ஒரு அரிவாளை எடுத்துத்தா..."

"முழுசா கேளு துளசிங்கம். நீ எப்பவுமே அவசரந்தான்."

"நீ என்ன செய்யணுமுன்னு நினைக்கியோ, அதை வட்டியும் முதலுமா நடத்துறதுக்கு சித்தி ஏற்பாடு பண்ணிட்டேன். இவளக் கூட்டிக்கிட்டு போலிஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். சுடலை மாடன சும்மா சொல்லப்படாது. சப்-இன்ஸ்பெக்டர் அய்யா இருந்தாரு, நடந்ததைச் சொன்னேன். மொதல்ல விரட்டுனாரு. அப்புறம் நான் துளசிங்கத்தோட சித்தின்னேன். அவ்வளவுதான். கடிச்ச பல்ல திறந்தாரு. இதுக்குள்ள நம்ம சினிமாக்காரங்களும் வேன்ல வந்தாங்க. திருமல வேனை பஞ்சராக்குனதைப் பத்தி புகார் கொடுத்திருக்காங்களாம். அது சம்பந்தமா. வந்திருக்காங்க. அதுவும் நல்ல தாப் போ ச் சு. ஏற்கனவே போ ன வ ரு ஷ ம் இந்த சப்-இன்ஸ்பெக்டரும், நம்ம ஊர் தகராறுல கார்ல இருந்துக்கிட்டே யாரையோ விசாரிச்சாராம். அப்போ இந்த திருமலை கார்ல இருந்து இறங்கி விசாரிச்சா என்னன்னு கேட்டானாம். அப்போவே அவனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/244&oldid=1243807" இலிருந்து மீள்விக்கப்பட்டது