பக்கம்:சாமியாடிகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

சு. சமுத்திரம்

இப்படிப் பெரிய எடுப்பில் வந்ததில்லை. இப்படி கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்ததில்லை. தராதரம் தெரியாமல் நடந்ததில்லை. இன்றோ லத்திக் கம்பு இருக்கு என்பதற்காகவே அடிக்கிறார்கள்.

ஊர் மக்கள் அனைவரும் இப்போது தனிப்படுத்தப்பட்டு தனித்தனி மனிதர்கள் போல் தவித்தார்கள். போலீஸ் வரக் காரணம் என்ன என்றுகூட பேச முடியவில்லை. ஒருத்தர் நின்றால் திட்டு. இருவர் நின்றால் மிரட்டல். மூவர் நின்றால் அடி.

அந்த ஊர் பகுதி பகுதியாக, தெருத் தெருவாக விடுபடாத பயத்தில் மூழ்கியது. ஒவ்வொரு தெருவிலும் நான்கைந்து போலிஸ் காரர்கள். வேட்டியை மடித்துக் கொண்டுகூட நடக்க முடியவில்லை. குழந்தைகள் அழுதால்கூட போலீஸ்காரர்கள் என்ன சத்தம் என்று உள்ளே வந்து அதட்டினார்கள். மாட்டுக்கு வைக்கோல் எடுக்க வெளியே வந்த ஒருவர் போலிஸ் முறைத்த முறைப்பில் உள்ளே ஒடிவிட்டார். பள்ளிக்கூடத்திலிருந்து வரும் நான்கைந்து பயல்கள், போலிஸ்காரர் இருவர் பார்த்த பார்வையில் திரும்பித் திரும்பி பார்த்தபடியே எங்கிருந்து விடுதலை உணர்வோடு வந்தார்களோ அங்கேயே ஒடினார்கள். ஆக மொத்தத்தில் அந்த ஊரே போலீஸ் வலைக்குள் சுருட்டி வைக்கப்பட்டது போன்ற காட்சி.

போலீஸ் வண்டிகள் ஊர் முழுக்க சர்க்கஸ் அடித்தபோது, சினிமா வேன் எலி டாக்டர் வீட்டுக்கு வந்தது. அதற்குள்ளும் நான்கைந்து போலீஸ்காரர்கள். தொப்பி தெரியாமல் இருந்தார்கள். அந்த வேனில் இருந்து துளசிங்கம் இறங்கியபோது, அலங்காரி, 'என் ராசா. நீதாண்டா சமர்த்தன் என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். துளசிங்கம் சினிமாக்கா களை இறங்கும்படி சைகை செய்தான். ஆனால் அவர்கள் இறங்கவில்லை டிரைவரை வண்டியை எடுக்கும்படி அவர் முதுகைப் பிடித்து முன்பக்கமாகத் தள்ளினார்கள்.

சினிமா வேன் பறந்தது எஞ்சிதம் தலைமையில் பீடி சுற்றும் பெண்கள் உள்ள முருகன் கோவிலை நோக்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/262&oldid=1244097" இலிருந்து மீள்விக்கப்பட்டது