பக்கம்:சாமியாடிகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

289

சாமியாடிகள் 289

"முணு மணிநேரம் சுவர்லயே மாட்ட வச்சிருந்தாங்களாம். என்னப் பார்த்துட்டு அழுதான். அழுதான். அப்டி அழுதான்."

பாக்கியம்மா, திடீரென்று எழுந்தாள். பெற்ற வயிற்றில் மாறி மாறி அடித்தாள். நாட்டு வக்கீல் நாராயணன் ஆற்றுவித்தான்.

"பொறுத்துக்க சித்தி, பொறுத்துக்க. நாளைக்கு அவன ஜாமீன்ல கொண்டு வாரது என் பொறுப்பு. இந்த புஷ்பத்த கூண்டுல ஏத்தி, வக்கீல வச்சு, அசிங்கம் அசிங்கமாய்க் குறுக்குக் கேள்வி கேட்க வைக்கேன் பாரு நாளை மத்தியானத்துள்ள திருமலய ஒன் கண்ணுல காட்ட வேண்டியது என் பொறுப்பு. அதுவரைக்கும் பொறுத்துக்க சித்தி. நம்ம வீட்டு முன்னாலயே போலீஸ் போட்டிருக்கான் பாரு”

சிறிது நேரத்தில், பழனிச்சாமி வீட்டுப் பக்கம் பாரா பார்த்த போலீஸ்காரர்களுடன் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். இடுப்பில் துப்பாக்கியுடனும் கையில் லத்திக் கம்போடும் வெளிப்பட்டுப் பேசினார்.

"எவண்டா அவன் பழனிச்சாமி. அவன் பெண்டாட்டி எங்க இருக்காள்?"

"சார் கொஞ்சம் மரியாதியாய்."

"லத்தி பிஞ்சுடும். கடத்தல் பயல்வளுக்கு என்னடா மரியாதை. கோலவடிவ கடத்தி எங்கடா வச்சிருக்கான், அந்த பழனிச்சாமி."

எல்லோரும் திகைத்து திக்பிரமை பிடித்து நின்றபோது கட்டிலில் குப்புறக் கிடந்த பழனிச்சாமி தலையை ஒரு குலுக்கு குலுக்கினார். அங்கிருந்து முற்றத்தில் குதித்து முன்நோக்கி நடந்தார். சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் இரண்டு கைகளையும் நீட்டியபடியே கத்தினார்.

"இந்தாப்பா. கையி. விலங்கை மாட்டய்யா. ஏய் பாக்கியம். இங்க வாடி. ஒன் கையிலயும் விலங்க மாட்டட்டும்."

"எங்கண்ணாச்சி கையில மட்டும் விலங்கு போச்கது. அப்புறம் தலையில் தொப்பி இருக்காது."

பழனிச்சாமி பதறாமலே சீறினார்.

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/291&oldid=1244117" இலிருந்து மீள்விக்கப்பட்டது