பக்கம்:சாமியாடிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

41

சாமியாடிகள் 41

"சும்மாக் கிடங்க... ஒங்கள மீறி போவாங்களா.. எப்பா மாருங்களா. அவிச்ச மொச்சக் கொட்டை வேணுமா. தாளிச்ச ஏழலைக் கிழங்கு வேணுமா."

"ரெண்டையும் கொண்டு வாங்களேன். மயினி.”

பாக்கியம் வீட்டுக்குள் போய்விட்டாள். கட்டிலில் உட்கார்ந்திருந்த அருணாசலம் கேட்டார்.

"நீங்க என்ன அண்ணாச்சி சொல்லுறிய."

“ஒன்னை தோல்வாயன்னு ஊர்ல சொல்லுறது சரியா. இருக்குடா. இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு, ஒங்களுக்கே தெரியவேண்டாம். அடிமுடி தெரியாத அம்மன் நம்ம அம்மன். இந்த சட்டாம்பட்டி தோன்றதுக்கு முன்னாலயே இருக்கிற அம்மன் நம்ம அம்மன். கண்கண்ட தெய்வம். கூப்பிட்ட குரலுக்கு பூவப் போட்டோ கெளளி மூலமோ குரல் கொடுக்கற தாய். அந்தத் தாய அவமானப் படுத்தறது மாதிரி வீடியோ படமுன்னும், ரிக்கார்ட் டான்சும் போடணுமுன்னா என்னடா அர்த்தம். இதைவிட அம்மன் கோவில இழுத்து மூடலாம்."

"செம்பட்டையாம் குடும்பத்து பயலுவ. வீடியோ படம் போடப் போறாங்களாம். டான்ஸ்காரியக் கூட்டி வரப் போறாங்களாம். நாம மட்டும் சும்மா இருக்காலாமான்னு நம்ம குடும்பத்துச் சின்னப்பய மவனுவ..." -

"செம்பட்டையானுவளும், நாம் கரும்பட்டையானும் ஒண்ணாடா. அவன் வீடியோ டான்ஸ் வச்சா. நாம் வைக்கணுமுன்னு கட்டாயமா. போட்டி நல்லதாகவும் இருக்கணும். நல்லதுலயும் இருக்கணும். கெட்டதுல வந்தால் கெட்டதுலதான் முடியும்.”

"நம்ம குடும்பத்து சின்னப்பய மவனுவ..."

"எந்தச் செறுக்கி மவனாவது பேசணுமுன்னா எங்ககிட்ட வந்து பேசச் சொல்லு ஒங்க ஆசையை அவங்க மூலம் சொல்லப்படாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/43&oldid=1243320" இலிருந்து மீள்விக்கப்பட்டது