பக்கம்:சாமியாடிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

49

சாமியாடிகள் 49

மனுஷன் அருணாசலமும், நரசிம்ம அவதாரம்போல் வாசலுக்கு உள்ளேயும், வெளியேயுமாய் இல்லாமல், வாசற்படியில் நின்று, பிறகு நிலைகுலைந்து நடந்தார். பேச்சியம்மாவின் நட்பு, அவளது பகையைவிட மோசமானது என்பது தெரிந்ததுபோல, அவள் குடும்பத்தோடு போனதை யாரும் கண்டுக்கவில்லை.

பழனிச்சாமி, அலங்காரியின் பக்கமாக வந்து நின்று, ஆறுதலாகவும், சூசகமாகவும் பேசினார்.

"அவள் அறிவில்லாதவள். அவள் பேச்ச பெரிசா எடுத்தா நாமதான் சிறிசாப் போயிடுவோம். ஆனால அண்ணாச்சி சொல்ற அர்த்தத்த புரிஞ்சுக்க. நாமல்லாம் வாழ்ந்து முடிஞ்சவங்க. நம்ம பிள்ளியளுக்கு நம்ம சொத்தவிட நம்ம பேருதான் பக்கபலமாக இருக்கும். ஒனக்கும் வயசாயிட்டு. அஞ்சுல வளையாதது ஐம்பதுல வளையணும். கோலவடிவை நீ அப்டி கேட்டிருக்கப்படாது. எம் பொண்ணுன்னு நான் பூசி மழுப்பி பேசல. இன்னொருத்தன்கூட வாழப் போறவளுக்கு சினிமாவுல நடிக்கனுமுன்னு. ஒரு எண்ணம் வரப்படாது. பாரு. ஆனால் அதுக்காக பேச்சியம்மா ஒன்னை அப்படி பேசக்கூடாதுதான். பாக்கியம், தங்கச்சிக்கு மோர் கொடு. ஏழா கோலவடிவு. ஆலமரம் பக்கம் போனே. திருமலைய, அங்கேயே ஒன்னை வெட்டிப் புதைக்கச் சொல்லியிருக்கேன்."

பாக்கியம் மோர் கொடுக்கும் எண்ணம் இன்றிப் பேசாது இருந்தாள். அதை அலங்காரி வேறுவிதமாக எடுத்துக் கொண்டாள். "பழனிச்சாமி குடும்பத்தின் சம்மதத்தின் பேரில்தான், பேச்சியம்மா பேசியிருக்கிறாள். அவள் பேசுவது. இவங்க பேசுவது மாதிரித்தான். இருக்கட்டும், இருக்கட்டும்."

ஆயிரந்தான் சொன்னாலும், அலங்காரி, பழிவாங்கும் உணர்வை விட, அவமானப்பட்ட உணர்வுடன் குலுங்கிக் குலுங்கி அழுதபடி போனாள்.

அலங்காரி போவதையே பார்த்துக் கொண்டிருந்த கோல வடிவிற்கும் கண்ணிர் கொப்பளித்ததது. அவள் சிந்திய கண்ணிரே ஆவியாகி, இவள் கண்களில் மேகமாகி, பெருமூச்சுக் காற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/51&oldid=1243328" இலிருந்து மீள்விக்கப்பட்டது