பக்கம்:சாமியாடிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ஆண்டுக்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவையோ காற்று தவிர எதுவும் உட்புகாத காட்டுப் பகுதிக்குச் சென்று, மனித சஞ்சாரங்களை மறந்து, ஒருத்தர் தனது கடந்த கால நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் மனதுக்குக் கொண்டுவந்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அனுபவம் முக்கியமல்ல. அனுபவத்தில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வதே முக்கியம் என்பார்கள்.

இந்த மாதிரியான பொன்மொழிகளோ அல்லது அனுபவப் பரிசீலனையோ செய்தாக வேண்டும் என்பதோ அலங்காரிக்குத் தெரியாது. ஆனாலும், அந்தப் பருத்திக் காட்டிற்குள் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருந்தாள். ஆகாயத்தை மறைக்கும் அடர்த்தியான புளியந்தோப்பிற்கு கிழக்கே உள்ள பருத்திக் காட்டில் அவள் முன் கையைத் தொடையில் ஊன்றி, மோவாயை உள்ளங்கையில் போட்டுத் தனது வாழ்க்கை நிகழ்ச்சிகளை அசை போட்டுக் கொண்டிருந்தாாள். விடலைப் பெண்கள் போல் வெடித்து நின்ற பருத்திச் செடிகள். வாழ்வுக்கு முடிவுரை கூறும் நிலையில் இருப்போரின் கணக்கை காட்டுவதுபோல், பருத்திச் செடி இலைகளிலும், வாய்க்காலோரம் இருந்த ஆமணக்குச் செடிகளிலும் சிதறுண்டு கிடந்த பருத்தி இலைகள். சவலைக் குழந்தைகளைப் போல குறும்பல்களைக் கழித்துக் கொண்டிருந்த சரல் கேட்டு செவ்விளணித் தென்னைகள். அவள் உடம்பை வருடிக் கொடுத்த அகத்திக்கீரைச் செடிகள். அவளுக்கு இதமான மெத்தை விரிப்பு இருக்கையைக் கொடுத்த பசும்புல் பரப்பு.

அலங்காரி அனைத்தையும் மறந்து தனக்குள்ளே தன்னைத்

தேடிக் கொண்டிருந்தாள். அப்படித் தேடித்தேடித் தான் தேட வேண்டியது அவசியமா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. உடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/53&oldid=1243334" இலிருந்து மீள்விக்கப்பட்டது