பக்கம்:சாமியாடிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

61

சாமியாடிகள் 61

"இப்பத்தான் தமிழே கத்துக்கிறியா..?"

"போடா. போடா. பொக்கி. அவள ரொம்பத்தான் கேலி செய்யுறே."

"ஆனால் நான் நிசமாவே சொல்லுதேன் சித்தி. திருமலை என்ன நெருங்கும்போது அவனை ஒரே போடாய் போட்டிருப்பேன். ஆனால் தற்செயலாய் இவள் முகத்தைப் பார்த்தேன். சரி. நாம செத்தாலும். பரவாயில்ல. இவள் அண்ணா, சாவப்படாதுன்னு அப்படியே நின்னேன். இல்லாட்டா பந்தாடியிருப்பேன்."

கோலவடிவு அவனை நன்றியுடன் பார்த்தாள். ஆனாலும் சவடாலாக இப்போது தைரியப்பட்டும் பேசினாள்.

"பந்தாடுறதுக்கு எங்கண்ணா கையில் என்ன வளையலா போட்டிருக்காரு..?"

"பாத்தியா சித்தி. அவளுக்கு வார கோபத்தப் "கரும்பட்டியான் குடும்ப ரத்தமாச்சே. கம்மாவா."

"நீ சொல்றதும் சரிதான் சித்தி. திருமலை அரிவாளோடும், நான் கல்லோடயும் நிற்கும்போது இவள் அண்ணா தலையைத்தான் மறச்சாள். என்னைப் பத்திக் கவலப்படல."

கோலவடிவு மென்று விழுங்கிப் பேசினாள்.

"அண்ணா தலய மறச்சி. அரிவாளையும் மறச்சுட்டா. அதுல ஒங்க மச்சான் மவனுக்கும் லாபந்தான அத்த."

"சரியாச் சொன்னே."

"ஆனால் ஒன்னுடா. துளசிங்கம், நம்ம கோலவடிவு ஆயிரத்துல. ஒருத்திடா. அவளவள் வாயில கெட்ட வார்த்தைகளை சுமந்துகிட்டுத் திரியும்போது இவள் வாயில தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்த வராது.டா.”

"பழகிப் பாத்தாத்தான் தெரியும்."

"போடா போக்கிரி. கோலவடிவு கோலவடிவுதான். கொஞ்ச நேரத்துக்கு முன்னால இவள் வீட்லயே இவள் கண்ணு முன்னாலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/63&oldid=1243486" இலிருந்து மீள்விக்கப்பட்டது