பக்கம்:சாமியாடிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சு. சமுத்திரம்

82 சு. சமுத்திரம்

கோலவடிவு அவனை அவசர அவசரமாக ஏறிட்டுப் பார்த்தாள். பார்த்த விழிகளை முகத்தைத் தாவிப் பார்த்தபடியே நின்றன. அலங்காரி அந்தச் சூழ்நிலையைச் சொல்லிக் காட்டினாள்.

“ஒனக்கு மூளையே கிடையாது.டா. ஒரு பொண்ணோட கண்ணசைவில இருந்தே அவளோட மனசைப் புரிஞ்சுக்கத் தெரியல. அதுவும் சரிதான். முன்னப்பின்ன எந்த பெண்ணோடவும் பழகியிருந்தால் தானே ஒனக்குத் தெரியும். நீதான் ஏகப் பொண்ணு விரதனாச்சே. சரிப்பா. நம்ம கோலவடிவு என்கிற நெனப்புல. அவள் நல்லா இருக்கணும் என்கிற எண்ணத்துல வைடா. குங்குமத்த வைடா கூறுகெட்ட குப்பா..."

இடது உள்ளங்கையில் ஆலிலைமேல் இருந்த குங்குமத்தை, ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்து எடுத்து, அவன் கரம் கோலவடிவின் நெற்றியில் போகப் போனபோது அவள் சிரித்துக் கொண்டே குனிந்தாள். சிணுங்கிக் கொண்டே பின்வாங்கினாள். அலங்காரி அவள் முதுகைப் பிடித்து நகர்த்தி, மோவாயைச் சற்று தூக்கி விட்டுவிட்டுக் கையை எடுத்தாள். அந்த முகம் உயராமலும், தாழாமலும் இருந்ததில் அவன் சந்தோஷப்பட்டபோது -

துளசிங்கம் வலது கையில் நான்கு விரல்களைக் கோலவடிவின் தலையில் பரப்பிக் கொண்டு பெருவிரலால், அவள் நெற்றியை அழுத்தினான். அந்தக் குங்குமப் பதிவை வட்டமாய்ப் பிரசுரிப்பது போல், பெருவிரலை அவள் நெற்றிப் பொட்டில் லேசாக சுழலவிட்டு, கரத்தை எடுத்தான். உடனே அலங்காரி குலவையிட்டாள். எங்கேயோ பார்த்த காகம் எழுந்து பறந்தோடும்படி வாய்க்குள் நாக்கை மணியடிப்பதுபோல் சுற்றிவிட்டு, "இனிமே கோலவடிவுக்கு நல்ல காலம்தான்" என்று சொல்லி லேசாய் நிறுத்திவிட்டு, "கோலம் இனிமேல் யார்கிட்ட வாழ்க்கைப்பட்டாலும் அது நல்லாவே அமையும்" என்றாள் எச்சரிக்கையாக,

கோலவடிவு, அங்குமிங்குமாய்ப் பார்த்தாள். கரையில் யாரையும் காணோம். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணோம். அவரு என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/84&oldid=1243514" இலிருந்து மீள்விக்கப்பட்டது