பக்கம்:சாமியாடிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

97

சாமியாடிகள் 97

அதை சொல்லப் போறதாய் மிரட்டி, என்னையறியாமலே எப்டி விவகாரத்தை தீர்த்து வச்சேனோ அப்படி நீங்களும் ஒங்கள அறியாமல்.’

"சட்டு புட்டுன்னு சொல்லேன்."

"பார்த்தீங்களா நான் பேசுறதை நீங்க காது கொடுத்து கேட்கிறதையே எனக்கு உபகாரம் செய்ததாய் நினைக்கீங்க."

'தப்புத்தாம்மா. தப்புத்தான். தோப்புக்கரணம் வேணுமுன்னாலும் போடுறேன்."

"நான் பீடி ஏசெண்டுகிட்ட எங்களோட குறையச் சொன்னேன். உடனே அவரு நான். என் சாதிப் புத்தியக் காட்டிட்டதா சொன்னாருட நான் அவரு. அவரோட வர்க்க புத்திய."

"அப்படின்னா..."

"அது ஒங்களுக்கும் புரியாது. ஆனாலும் சொல்லுதேன். அவரு தன்னை முதலாளியா அனுமானிச்சு. அதுக்குரிய முதலாளியத்துவ புத்தியக் காட்டுறார்னு சொல்லுறதுக்காவ சாதிப் புத்தின்னு. அவரு சொன்னதும் நீங்கதான் காட்டுறீங்கன்னு" சொன்னேன். அந்த ஆசாமி. ரொம்பக் கெட்டிக்காரன். உடனே அவன் ஒங்க சாதி முழுசயுமே குற்றம் சொல்லுறதாய் விஷயத்தை திரிச்சி விஷமாக்கிட்டான். சக தோழிகளுக்கு சாதிவெறிய வேற ஊட்டிட்டாரு. அவள்களும், ரஞ்சிதம் நீ எது வேணுமுன்னாலும் பேசியிருக்கலாம். ஆனால் எங்க சாதிய மட்டமாப் பேசியிருக்கப்படாதுன்னு என்னையே திட்டிட்டு. என்னை தனியா நிற்க வச்சுட்டு உள்ளே போயிட்டாளுவ பீடி ஏசெண்டு இன்னுந் திட்டினான். செருக்கியாம் தேவடியாளாம். ஊருல நான் இருக்க முடியாதுன்னு சொன்னான். என்னால தட்டத்தான் மாத்த முடிஞ்சுதே தவிர அநியாயத்த மாத்த முடியல..."

"இதை கேட்டதுக்கே என் ரத்தம் இப்படிக் கொதிக்குது. ஆனால் நீ எப்படி இப்டி சிரிச்சுக்கிட்டே பேச முடியுது."

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/99&oldid=1243540" இலிருந்து மீள்விக்கப்பட்டது