138
சாயங்கால மேகங்கள்
போலீஸ் விசாரணை வழக்கு என்றெல்லாம் போனால் தன் மகனின் சூட்டு உடைந்து போகும் என்று பயந்து அவரே இந்தக் செய்தியை அப்படியே பூசி மெழுகி அமுக்கி விட விரும்பினார். பெரிது படுத்த விரும்பவில்லை. இதைப் பெரிது படுத்தினால் தன்னுடைய மானம்தான் போகும் என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். மற்றவர்களுக்கு முன் விட்டுக் கொடுக்க விரும்பாவிட்டாலும் தன் மகனின் வண்டவாளம் அவருக்கு நன்றாகத் தெரிந்தே இருந்தது.
அரசியல் பிரபலமாக இருந்து கொஞ்சம் பணம் காசு பண்ணிக்கொண்டிருக்கிற சமயம் பார்த்துப் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடாதே என்று அவரே தன் மகன் குமர குருவைக் கண்டிக்கவும் தயங்கவில்லை.
முற்றிலும் கெட்டவனாக இருப்பதையோ, கெட்ட வழியில் பணம் பண்ணுவதையோ, கெடுதல்கள் செய்வதையோ பற்றி எந்த அரசியல்வாதியும் கூச்சப்படவில்லை. ஆனால் கெட்டவன் என்று பத்திரிக்கைகளில் பெயரெடுப்பதையோ பிரச்சாரம் ஆவதையோ மட்டும் விரும்புவதில்லை. பன்னீர்ச்செல்வமும் அப்படித்தான் இரட்டை வேஷம் போட்டார். மக்கள் தொண்டராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஏழை பங்காளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் தொண்டர் ஏழை பங்காளர் என்ற பாசாங்குகள் ஒவ்வொரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு இன்று தேவைப்பட்டன.
ரெளடி குமரகுருவின் தந்தை பன்னீர்ச்செல்வத்திற்கும் அந்தப் பாசாங்குகள் தேவையாய் இருந்தன. பயன் பட்டன. பழகிப் போயிருந்தன. இந்த நூற்றாண்டு அரசியலுக்கு யோக்கியனை விட யோக்கியனைப் போல் பாசாங்கு செய்யும் சாமர்த்தியமுள்ளவனே எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்பட்டான். யோக்கியனும், நல்லவனும், இடையூறாகவும், தொந்தரவாகவுமே கருதப்பட்டார்கள். யோக்கியதையும், ஒழுக்கமும் ‘நியூசென்ஸாக'க் கருதப்-