உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வந்த ஆள் ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டி “எனக்கு உட்கார நேரமில்லே...அவசரம்! நான் பூமியை உடனே பார்த்தாகணும்” என்று பறந்தார்.


14

இன்றைய சினிமா என்பது யதார்த்த உலகின் கஷ்டநஷ்டங்களை உணர விடாமல் அவற்றிலிருந்து இளைஞர்களைப் பொய்யாக வும் கற்பனையாகவும் உயர்த்தி வைத்து வெற்றுக் கனவு காணச் செய்வதாக இருக்கிறது.


ந்திருப்பவர் காட்டிய நாகரிகக் குறைவான அவசரம் சித்ராவுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. ‘நானே தேடி வந்திருக்கிறபோது அவன் எப்படி இல்லாமற் போகலாம்?’ என்கிற அவரது தொனியில் ஆணவம் இருந்தது. பொறுமையில்லாத மனிதராகத் தென்பட்டார் அவர். எங்கும் எதிலும் உலகமே தனக்கென்று தயாராகக் காத்திருக்கக் கடமைப்பட்டிருப்பதுபோன்ற அகங்காரத்தோடு பேசினார். அவசரத்தோடு பறந்தார்.

சற்று முன் அவரே கொடுத்த விசிட்டிங் கார்டிலிருந்து அவர் ஒரு சினிமாத் தயாரிப்பாளர் என்று சித்ராவுக்குத் தெரிந்திருந்தது. அவசரமும் பொறுமையின்மையும் தரத்துக்காகச் சிறிது நேரம் காத்திருக்கக் கூட நிதானமின்மையும் சினிமாவோடு கூடப் பிறந்த குணங்கள் என்பதை அவள் அறிவாள். அவசரமும் பரபரப்பும் இந்த நூற்றாண்டின் பொதுக் குணங்க-