பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சாய்ந்த கோபுரம்



டாடினர் மக்கள். குதூகலக் கடலில் குதித்தனர் கொரில்லாப் படையினரும், இளைஞர்களும், பாராட்டினர் பெரியோர். பாராட்டு மடல் ஒன்று பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. சரியான நேரத்தில் சரியாக நடந்துகொண்ட அரசாங்கத்தின் சாமர்த்தியத்தை வியந்தனர் விவேலிகள். பிணமாகக் காணவேண்டிய பெருந்தலைவனை உயிரோடு கண்டமக்கள், பெற்றெடுத்த தாயைப் போல் அணைத்துக் கொண்டனர். "வாழ்க விடுதலை வீரன்," "வாழ்க மாஜினி!" என்று வாயார வாழ்த்திப் பேரொலி செய்தனர். இறப்பெனும் கோரஉருவத்தின் கொடிய பற்களுக்கிடையே சிக்கிச் சின்னா பின்னப்படவிருந்த எங்கள் உண்மையான தலைவனை உயிரோடு மீட்டோம் என்று எக்காளமிட்டனர் மக்கள். எங்கும் வெற்றிவிழா. பொது விடுமுறை. பூரித்தது இத்தாலி. புன்னகை புரிந்தன அண்டை நாடுகள். களிப்பெய்தினர் எல்லாரும். ஆனால், முணுமுணுத்தனர். மன்னர் பரம்பரையினர்.

தேர்தல்

அடுத்துப் பாராளுமன்றத்தேர்தல் வந்தது. மாஜினியை அதன் தலைவர்களாக்கினார்கள். மக்கள் போட்ட அபரிமிதமான ஓட்டுகள் மூலம், மரண தண்டனையடைந்த மாஜினி பாராளுமன்றத் தலைவன். தூக்குக் கயிறு சுற்றும் கழுத்தில் மலர் மாலைகள். குற்றவாளி இன்று தலைவன். சிறைக்கைதி செங்கோலுக்குப் பக்கத்தில். மன்னிப்புக்