உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. காஃபி பேலஸ் சுவையான சாப்பாடு, மணக்கும் காஃபி இரண்டுமே சாவிக்கு ரொம்பவும் பிடித்தவை. நான் சாப்பாட்டு ரசிகன்; சாப்பாட்டு ராமன் அல்ல என்று சொல்வார் அவர். ரொம்பவும் குறைவாகத்தான் சாப்பிடுவார். சாப்பாடு சுவையாக இருக்க வேண்டும். ருசியாகச் சமைக்கவும் தெரியும் அவருக்கு. ரவா உப்புமா பற்றி வாஷிங்டனில் திருமணத்தில் ஒரு வர்ணனை வரும். அதைப் படிக்கும்போது நாக்கில் நீர் ஊறும். அவ்வளவு ரசனையோடு எழுதியிருப்பார். ரவா உப்புமா என்றால் அதற்கு என்னென்ன போடவேண்டும், எவ்வளவு போட வேண்டும் என்பதை அவர் மிக நேர்த்தியாகச் சொல்வார். அவரோடு நான் ஜப்பான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குப் போயிருந்த போது சமையல் பற்றிய அவரது நுணுக்கமான அறிவைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். ஹாங்காங்கில் நண்பர் பாலன் சச்சித் அவர்களின் வீட்டிலும், சிங்கப்பூரில் நண்பர் யாகப் அவர்களின் வீட்டிலும் 'இப்படிச் செய்... அப்படிச் செய்...' என்று அவர் சொல்லச் சொல்ல நான் சாம்பார், உருளைக் கிழங்கு வறுவல் எல்லாம் செய்திருக்கிறேன். மணக்க மணக்க கிச்சடியும் ரவா உப்புமாவும் கிண்டிய நாட்கள் மறக்க முடியாதவை. சரி, காஃபி பேலஸுக்கு வருவோம். ஆரம்பத்தில் அங்கே காஃபி மட்டுமே தருவது என்று. 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/104&oldid=824346" இலிருந்து மீள்விக்கப்பட்டது