உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 நன்றி செலுத்துவது போல ஆண்டவனுக்கு நன்றி செலுத்து கிறோம். அதனால் இந்துக்கள் நன்றி செலுத்துகிற இடம் சப்தமாகத்தான் இருக்கும். மேள தாளங்களுடன் மகிழ்ச்சி பொங்கும்" என்று நான் சொன்ன பதிலில் அவன் ரொம்பவும் 'கன்வின்ஸ் ஆயிட்டான். 'என்னைப் பார்க்கும் போது ஏசுநாதரைக் காண்பது போல் இருப்பதாக (1 Saw Christ in him) அவன் எழுதியுள்ள 'Lotus and Wheel என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளான். உனக்கு டாக்டர் ராகவன் தெரியுமோல்லியோ, மியூசிக் அகாடமி செக்ரட்டரி, அவனிடம் அந்தப் புத்தகத்தோட காப்பி இருக்கு. நீ மெட்ராஸ் போனதும் அதை வாங்கிப் படி" என்று கூறிய பெரியவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அதோ அங்கே உட்கார்ந்திருக்கிறாளே அந்தப் பெண்மணி, அந்த ரைட்டர் - அவர்கள் இரண்டு பேருமே கிறிஸ்து மதத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெண்மணியும் என்னிடம் ஏசுநாதரைக் காண்பதாகச் சொல்கிறாள். ஆனா இந்து மதத்தைச் சேர்ந்த நாம் இந்துக்களை கிறிஸ்து மதத்தில் சேரச் சொல்லி விளம்பரப்படுத்தறோம். இது சரியா?" என்று கேட்டார். - இதையெல்லாம் கேட்கக் கேட்க சாவிக்குப் பெரியவர் பேச்சில் இருந்த நியாயம் விளங்கியது. அவரை வணங்கி ஆசி பெற்று, "நான் வாசன் அவர்களிடம் உங்க விருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என்று மட்டும் சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டார். சாவி சென்னை திரும்பியதும் முதலில் இது பற்றி வாசன் அவர்களைப் பார்த்துப் பேசத்தான் எண்ணியிருந்தார். ஆனாலும் பாலு அவர்களிடமே முதலில் தெரிவித்து அவர் அபிப்ராயம் அறிந்து கொள்வதுதான் முறை என்று தீர்மானித்து பாலு அவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னார். 142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/152&oldid=824453" இலிருந்து மீள்விக்கப்பட்டது