உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. காமராஜரின் மதிநுட்பம் 'வடக்கு வளர்கிறது - தெற்கு தேய்கிறது என்பது தி.மு.க.வின் முழக்கமாக இருந்த நாட்கள் அவை. தெற்கும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக தமிழக மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள தொழிற்சாலைகள் பற்றியும், வளங்கள், முன்னேற்றம் பற்றியும் தெற்கு வளர்கிறது என்ற தலைப்பில் சாவி விகடனில் எழுதிய கட்டுரைகள் அவரது எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தன. அதன் மூலம் பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை ஜி.டி.நாயுடு போன்ற பிரமுகர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் சாவிக்குக் கிடைத்தது. இந்தப் பயணங்களின் போது சாவியும் ஒவியர் கோபுலுவும் ஒரு முறை ஊட்டிக்குப் போயிருந்தார்கள். அங்கே அப்போது காமராஜர் அவர்களும் முகாமிட்டிருந்தார். சாவி கோபுலு இருவரையும் கண்டதும் காமராஜ் 'எங்க வந்திங்க?" என்று கேட்டார். " இங்கே போயிருக்கிறீர்களா?' என்ற தலைப்பில் சில இடங்களைப் பார்த்து கட்டுரை எழுதி வருகிறோம். ஊட்டியைப் பற்றி எழுத வந்திருக்கிறோம்" என்றார் சாவி. ஊட்டியில், தமிழ்நாடு இல்லம்' கட்டுவதற்கு அப்போதுதான் காமராஜ் அவர்கள் இடம் தேர்வு செய்து கொண்டிருந்தார். புறப்படும் போது சாவி, கோபுலு இருவரையும் நீங்களும் வாங்க, பார்க்கலாம் என்று கூறித் தம்முடன் அழைத்துச் 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/168&oldid=824487" இலிருந்து மீள்விக்கப்பட்டது