சாவி - 85 அவர்கள் போன பிறகு சாவி பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்: "ஐயா, உங்கள் வாழ்நாளில் இதுவரை ஆயிரக்கணக்கான கூட்டத்தில் பேசி இருப்பீர்கள். இந்தத் தள்ளாத வயதில் இன்னமும் கூட்டம் கூட்டம் என்று ஒப்புக் கொள்கிறீர்களே! கூட்டங்களில் பேச உங்களுக்கு அலுப்பாக இல்லையா சலிப்பு வருவதில்லையா?” 'ஒரு இயக்கத்தைத் தொடங்கிட்டா அதில் கடைசி வரைக்கும் உறுதியா இருந்து பார்த்துடனும், அலுப்பாவது, சலிப்பாவது ஒண்ணு தெரியுமா? சின்ன வயசில நான் முதமுதல்ல மீட்டிங் பேசப் போனப்போ எவ்வளவு உற்சாகத்தோடு போனேனோ அதே உற்சாகத்துடன் இன்னைக்கும் போறேன்." 'பெரியாரின் இந்த பதிலைக் கேட்டதும் எனக்கு அவர் மீது இருந்த மதிப்பு மேலும் பல மடங்காக உயர்ந்து விட்டது. அன்று முதல் பெரியார் கடைப்பிடிக்கும் அதே உற்சாகத்தை நானும் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்." சமூக சீர்திருத்த எழுத்தாளரான திரு. வ.ரா. அவர்களைப் போலவே சாவி அவர்களும் பூணுால் அணிவதில்லை என்பது வியப்புக்குரிய செய்தி. “எனக்குக் கடவுள் பக்தி, மதப்பற்று எல்லாம் உண்டு. ஆனால் அர்த்தம் புரியாத வைதிகச் சடங்குகளில் சம்மதம் இல்லை. மந்திரம், ஜபதபம் இவற்றில் முழு நம்பிக்கை உண்டு. ஆனால் அவற்றைச் சரியாகச் செய்ய முடியாத போது பூணுரல் மட்டும் எதற்கு? பூணுரலை ஒருநாள் கழற்றி எறிந்து விட்டேன். ஏதோ பிராமணியத்துக்கு எதிரான செய்கையாக அதை நான் கருதவில்லை. பூணுல் தொடர்பான ஆவணி அவிட்டம் போன்ற 166
பக்கம்:சாவி-85.pdf/184
தோற்றம்