ராணிமைந்தன் எம்.ஜி.ஆருடன் பேசியபின் தான் வந்த விஷயம் வெற்றியடைய வில்லையே என்ற வருத்தத்துடன் வீடு திரும்பினார். அப்புறம் சில நாட்களுக்குப் பின்னர் வித்வான் லட்சுமணன் சாவியைத் தேடி வந்தார். "எம்.ஜி.ஆர். உங்களைப் பார்க்க விரும்புகிறார் என்றார். "என்ன விஷயம்?' சாவி கேட்டார். "தெரியவில்லை. ஏதோ முக்கிய விஷயமாகத்தான் இருக்க வேண்டும். உங்களுக்குப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்' என்று சாவிக்கு ஏதோ பெரிய அதிருஷ்டம் வந்து விட்டதுபோல் பேசி அவரை உற்சாகப் படுத்தினார். மறுநாள் சாவி, எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். "வாங்க; உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. தினமணி கதிரில் நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதப் போகிறேன். நீங்கள் போஸ்டர்கள் அடித்து பிரமாதமாக விளம்பரப்படுத்துங்கள்' என்றார் எம்.ஜி.ஆர். சாவி இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 'எம்.ஜி.ஆர். பதில்கள் என்றால் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும் என்று சாவி எண்ணிய போதிலும் "நீங்கள் எதிர் பார்க்கிற அளவுக்கு விளம்பரம் செய்ய எனக்கு அதிகாரமில்லை. எனினும் கோயங்காவைக் கேட்டுப் பார்க்கிறேன். தினமணி கதிரில் வேண்டுமானால் தொடர்ந்து நாலு வாரங்களுக்கு விளம்பரம் செய்கிறேன்' என்றார் சாவி. சரி, இந்த வாரமே விளம்பரம் போட்டு விடுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். 'ஆகட்டும்; உங்களிடம் ஒரு வேண்டுகோள் என்றார் சாவி, "என்ன? சொல்லுங்கள்." 225
பக்கம்:சாவி-85.pdf/243
தோற்றம்