உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. சாவி வாயால் சபாஷ்! ஒருவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் அத்திறமை அரங்கேற யாராவது களம் அமைத்துத் தர வேண்டும். ஆம்... அப்படித்தான்... வெரிகுட்... தொடர்ந்து செய்...' என்று யாரேனும் ஒருவர் முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும். அந்த யாரேனும் ஒருவர் சாவியைப் போன்று வேறு யாராவது இருக்கிறார்களா என்பது வினாக்குறிதான். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நான் சாவி அவர்களோடு நெருங்கிப் பழகி வருகிறேன். அவர் யார் யாரை எப்படியெல்லாம் ஊக்குவித்திருக்கிறார் என்பதைக் கூடவே இருந்து கவனித்திருக்கிறேன் என்றாலும் இந்த நூலை நான் எழுதத் தொடங்கியபோது எல்லாவற்றையும் நாமே எழுதிக் கொண்டிருப்பதை விட சம்பந்தப்பட்டவர்களையே கேட்டுப் பார்ப்போமே என்று தோன்றியது. சிலரைத் தொடர்பு கொண்டபோது சாவியைப் பற்றிய அவர்களது நன்றி பொங்கும் நினைவுகள் மலையாய்க் குவிந்து போயின. பானை முழுவதையும் கொட்டிப் பரிமாற இடமில்லை. எனவே பதம் பார்க்க இங்கே சில பருக்கைகள். 'இந்த இரண்டெழுத்து எழுத்தாளர் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியவர் என்றாலும் இதை அவராக 279

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/297&oldid=824761" இலிருந்து மீள்விக்கப்பட்டது