உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ஒருமுறை வாரா வாரம் ஏதாவது பொருள் பற்றித் தொடர் எழுதுங்களேன் என்றார் சாவி. 'குப்பையைப் பற்றி எழுதட்டுமா? என்று கேட்டேன். 'சரி எழுதுங்கள். ஆனால் ஒரே பக்கத்துக்குள் விஷயம் அடங்க வேண்டும் என்று வரம்பு கட்டினார். சுருக்கி எழுதும் கலை சும்மா வந்து விடாது என்று எனக்குப் புரிய வைத்ததும் வேண்டாததை வெட்டி எறியவும், சொல்ல வந்ததை சுவாரசியமாகச் சொல்லக் கற்றுக் கொண்டதும் சாவி பயிற்சிக்கூடத்தில்தான்." 'பத்திரிகைத் துறையில் என் ஈடுபாடு தளர்ந்து போன நேரங்களில் உற்சாக உரமூட்டி என்னை வளர்த்த பத்திரிகையாளர்களில் சாவிக்குத்தான் முதலிடம் என்கிறார் மெரீன்ா. 'நான் கூட மறந்துவிட்ட என் ஜோக்குகளையும், அரசியல் கார்ட்டுன்களையும் பல வருடங்கள் கழித்து ரசித்தும் பாராட்டியும் அவர் நினைவு கூர்ந்து சொல்லும்போது எனக்கு வியப்பாக இருக்கும் என்று சொல்லும் மெரீனா, தாம் சாவியுடன் மதுரையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு விகடன் சார்பாகச் சென்றிருந்த அனுபவத்தை நினைத்துப் பார்க்கிறார்: 'மேடைப் பேச்சுகள் தவிர எத்தனையோ 'ஸைட் லைட்ஸ்களில் சாவி என் கவனத்தைத் திருப்பி குறித்துக் கொள்ளச் சொல்வார். ஒரு நிருபருக்கு கை, காது, கண், சிந்தனையெல்லாம் ஒருங்கே செயல்பட வேண்டும் என்பதை சாவியிடமிருந்து நான் அறிந்து கொண்டேன். ஒரு பத்திரிகையாளனுக்கு அப்சர்வேஷன்" மிகமிக முக்கியம். குறிப்பெடுக்க மறந்ததை நினைவில் நிறுத்திக் கொள்ளும் திறன் தேவை. சாவி அதிகமாகக் குறிப்பெடுத்து நான் பார்த்ததில்லை. 'பார்ப்பதையும், கேட்பதையும் நமக்குள்ளே’ வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கட்டுரை எழுதும் 289

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/307&oldid=824773" இலிருந்து மீள்விக்கப்பட்டது