சாவி - 85 சந்தித்தபோது மாத்திரமல்ல, மற்றவர்கள் அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போதும் கவனித்திருக்கிறேன். அவரது அனுபவங்கள் அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம். மண் பயனுற வேண்டும் என்ற மகாகவியின் வரிக்கு சிறந்த உதாரணம் சாவி அவர்கள்' என்று செல்வா எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். . மலேசியாவில் சாவிக்குக் கிடைத்துள்ள மற்றொரு அருமை நண்பர் நீதிபதி பூரீராம். கோலாலம்பூரில் பிரபல வழக்கறிஞராக இருந்து இப்போது நீதிபதியாகப் பதவி வகிக்கிறார். நீதிபதியானதும் வருவாய் குறைந்து விட்டதால் தர்மங்கள் அதிக அளவில் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறார். இவரது மனைவி திருமதி சந்திரா ரீராம் ஒரு சிறந்த பரத நாட்டியக் கலைஞர். பண்பின் உறைவிடம். தெய்வ பக்தி மிக்கவர். இந்த இனிய தம்பதியரின் இரண்டு பிள்ளைகளும் லால்குடி ஜெயராமன் அவர்களிடம் வயலின் கற்றுத் தேர்ந்து அவருடைய பெருமைக்குரிய சீடர்களாயிருந்து வருகிறார்கள். பூரீராம் தம்பதியர் இந்தியா வரும்போதெல்லாம் சாவியைப் பார்த்துப் பேசாமல் திரும்புவதில்லை. சமீபத்தில் பூரீராம் டத்தோ பூரீராம் ஆகியிருக்கிறார். - நல்லதொரு எழுத்தாளருக்கு எங்கேயும் மரியாதை உண்டு என்பதற்கு சாவி மலேசியா சிறப்பிதழ் வெற்றி பெற மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு செய்த உதவிகளை முக்கியமாகச் சொல்ல வேண்டும். தன் வாழ்நாளில் அறுபது சதவீதத்தை பத்திரிகைப் பணிக்கே செலவிட்ட மிகச் சிறந்த எழுத்தாளர் சாவி. இவருக்கு நாம் உதவ வேண்டியது அவசியம்' என்று தாமே மலேசியாவின் பல முக்கிய வர்த்தகப் பிரமுகர்களுடன் தொலை பேசியில் பேசி அந்தச் சிறப்பு மலருக்கு விளம்பரங்கள் வாங்கி உதவியுள்ளார். டத்தோ செய்த இந்தப் பேருதவியை சாவி எப்போதும் மறந்ததில்லை. எந்த நாட்டுக்குப் போனாலும் சிங்கப்பூருக்கு ஒரு 310
பக்கம்:சாவி-85.pdf/336
தோற்றம்