ராணிமைந்தன் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. அப்படியே ஆனந்தமாகத் தூங்கிவிட்டார். ஏற்கெனவே அவரது பக்கத்து அறையில் இருந்த ஒவியர் வர்மா இப்படித்தான் தூங்கிவிட அதை மாலி பார்த்துவிட்டு, அவருக்கு சீட்டு கிழித்து விட்டார்கள். அது அப்போது ஞாபத்துக்கு வர தூங்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் கதையைப் பிரித்து படித்த போதிலும் இரண்டு நிமிடங்களில் மெய்மறந்து தூங்கிப் போனார். அவரது போதாத காலம், அன்று பார்த்து வாசன் அவர்கள் காலையிலேயே "ஸர்ப்ரைஸ் விஸிட்' வந்து யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்திருக்கிறார். அந்த நேரம் சாவி தலையை மேஜை மீது சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் போயிருக்கிறார். பதினோரு மணிக்கு சாவிக்கு ஒரு தகவல் வந்தது. அக்கெளண்டன்ட் உங்களைக் கூப்பிடுகிறார். அக்கெளண்டன்ட் வாஞ்சிநாதய்யர் முன் போய் நின்றார். உங்க கணக்கைத் தீர்த்து அனுப்பச் சொல்லி முதலாளி உத்தரவு என்று அதுவரையிலான சம்பளத்தைக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். 'முதல் நாள் டிஸ்மிஸ் ஆன வர்மாவுக்கும் அன்றுதான் கணக்கு தீர்க்கப்பட்டது. அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நாங்கள் இருவரும் நேராக அம்பீஸ் கபே போய் அபூர்வமாக ஸ்வீட் சாப்பிட்டு ஆனந்தமாய் துக்கம் கொண்டாடினோம்" என்கிறார் சாவி. ஆக, மறுபடியும் வேலையில்லா இளைஞராகச் சுற்ற ஆரம்பித்தார். சில நாட்களுக்குள்ளாகவே உலகப் போர் மூண்டு சென்னை நகரம் இருட்டடிப்பில் மூழ்கியது. பல குடும்பங்கள் குண்டு வீச்சுக்குப் பயந்து வீட்டைக் காலி செய்து கொண்டு தங்கள் சொந்த ஊருக்குப் போய் விட்டார்கள். தானும் சென்னையை விட்டு கிராமத்துக்குப் போய் விடலாமா என்று யோசித்துக் 49
பக்கம்:சாவி-85.pdf/59
தோற்றம்