உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாவி-85.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சர் முத்தையா செட்டியாருக்குச் சொந்தமான கமர்ஷியல் பிரஸ்ஸில் வெள்ளி மணி அச்சாகி வந்தது. அந்த ஆண்டு தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்த நேரம். "இந்த வருஷம் கல்கி பத்திரிகை தீபாவளி மலர் போடப் போவதில்லை. நீங்கள் போடுங்கள். ஏ.வி.எம்மிடம் அதற்கு வேண்டிய பணம் தரச் சொல்கிறேன்' என்றார் கல்கி. சாவியும் சின்ன அண்ணாமலையும் உடனே சுறுசுறுப் பானார்கள். வியாபார அனுபவம் இல்லாததால் தீபாவளி மலர் ஐயாயிரம் பிரதிகள் அச்சிட்டு விட்டார்கள். அவற்றில் பாதிக்கு மேல் விற்பனையாகாமல் தேங்கிப் போயிற்று. ஏக நஷ்டம். கமர்ஷியல் பிரஸ்ஸுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகை ஏறிக் கொண்டே போனது. வெள்ளி மணிக்கு ஏ.வி.எம். பெரிய அளவில் உதவி செய்து கொண்டிருப்பதாக ஒரு செய்தி ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களின் காதுக்கு எட்டியது. வெள்ளி மணியை ஏ.வி.எம். செட்டியார் விலைக்கே வாங்கி விட்டார் என்று கமர்ஷியல் பிரஸ்காரர்கள் நம்பி, 'உங்கள் வெள்ளி மணி தர வேண்டிய பதினேழாயிரம் ரூபாய் பாக்கியை தயவு செய்து உடனே அனுப்பி உதவுவீர்கள் என்று நம்புகிறோம்" என்று செட்டியாருக்கு ஒரு கடிதம் எழுதி விட்டார்கள். கடிதத்தைக் கண்டதும், ஆரம்பமே சரியில்லையே என்று ஏ.வி.எம். அவர்கள் சங்கடப்பட்டார். உடனே 'அது என் வெள்ளி மணி அல்ல. யார் சொன்னது அப்படி?" என்று ஒரு கேள்வியுடன் பதில் எழுதி அனுப்பி விட்டார். - அதே நேரத்தில் இன்னொரு பக்கம் கல்கி - சதாசிவம் இருவருக்குள் புகைந்து கொண்டிருந்த பகை முற்றிப் போகவே உறவு முறிந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ராஜாஜி, அவர்கள் இருவரையும் பழையபடி 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/94&oldid=824915" இலிருந்து மீள்விக்கப்பட்டது