பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரைமணி நேர அறுவை


கல்வி, விவசாயம், கோழி விஸ்தரிப்பு அதிகாரிகள் உட்பட எண்ணக்கூடிய அதிகாரிகளும், எண்ணில்லா இதர ஊழியர்களும், ஃபீல்ட் ஒர்க்கர்களும், அந்தப் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்ச் பண்ணிக் கொண்டிருந்தார்கள். காரணம், நடப்பு நிதியாண்டு முடியும் 'மார்ச்' மாதத்திற்குள், வேலை நடக்கிறதோ இல்லையோ, ஒதுக்கீடு என்ற பணத்தை எப்படியாவது செலவு செய்தாக வேண்டும். எப்படிச் செலவு செய்தாலும், 'இப்படித்தான் செலவு செய்தோம்' என்று காட்டியாக வேண்டும். இல்லையென்றால், கலெக்டர் அவர்களை இந்த வசதியான இடத்திலிருந்து துரத்தி, வசதியற்ற இடங்களைக் காட்டிவிடுவார். ஆகையால், எல்லோரும் ஆணையாளரைப் பார்த்து ஆலோசனை கேட்க, அலைமோதிக் கொண்டிருந்தனர்.

ஆணையாளர் ஐயப்பன், தன் அறைக்குள் சில பஞ்சாயத்துத் தலைவர்களிடம் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, 'வெத்துமாஞ்சாவடி' ஊராட்சித் தலைவர் ஒப்பிலியப்பன் "வணக்கம்!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார்.

அவரைக் கிள்ளுக்கீரை போல் கடைக்கண் பார்வையால் அலட்சியப்படுத்திவிட்டு, வாடாதபட்டித் தலைவர் வைரவனிடம் ஆணையாளர் ஆவேசமாகப் பேசினார் :

"தலைவரே....! நீங்களே சொல்லுங்க... இவரோட வெத்துமாஞ்சாவடில, மேல்நிலைக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்ததே நான் பில்டிங் கட்டியாச்சு. யந்திரங்களும் வந்தாச்சு. ஆனா அந்தக் கட்டடத்துல மேல் பாகம் பைசா நகரத்துக் கோபுரம் மாதிரி இரண்டு அங்குலம் வளைந்து நிக்குது. கட்டிடம் விழுந்துடக் கூடாதுங்கறதுக்காக ஒரு அணைப்புச் சுவர் கட்டலாமான்னு