பக்கம்:சிதறல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 "நம் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் இருக்கிருரே அவ ரைத்தெரியுமா” என்று கேட்டாள். "இருக்கிருர்’ "அவர் ஒய்வு பெற்றுவிட்டார். ஆனல் இன்னும் பணி செய்கிருர்' - . பஏன்?" "வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல்தான்?" "அவர் சதா மில்ட்டனின் பாரடைஸ் லாஸ்ட் ரிகெய்ண்ட் இதையே பேசுவார்." மற்ருெருவர் ஒருவர் இருக்கிருர், ஒவ்வொரு ஞாயிறும் குதிரைப் பந்தயத்துக்குப்போய்ச் சம்பாதித்தை இழந்து விட்டு வேதனையோடு திரும்புகிறர்.” "ஒவ்வொருவரும் அதிகம் உழைக்க விரும்புவதில்லை. தேவைக்கு ஏற்ற உழைப்புதான்." "அப்படி என்ருல்" "யாரும் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. செய்தி கள் படிக்க அவ்வளவுதான். அதற்குமேல் புற உலகத் தைப்பற்றிக் கவலைப்படுவதில்லை." "துணிந்து என்னை அவர் என்று அறிமுகப்படுத்து கிருயே ஏன்?" "நானும் கொஞ்சம் தமாஷ் அனுபவிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்க்கை ரொம்பவும் மந்த மாகவிட்டது. நினைத்துப்பார்த்து ரசிக்கவேண்டிய நாட்: கள் படித்த நாட்கள். இப்பொழுது பிரச்சனைகளோடு மோதவேண்டும். அவ்வள்வுதான்." "என்னைத் துணிந்து அறிமுகப்படுத்தும்பொழுது இப் படிச் செய்வீர் என்று நான் எதிர்பார்க்கவில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/105&oldid=825423" இலிருந்து மீள்விக்கப்பட்டது