பக்கம்:சிதறல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது. அந்த ஒலியைக் கேட்காவிட்டால் அவருக்குத் தூக்கமே வராதாம். அதற்காக அவர் அதை டேப் ரிகார்டு பண்ணி வைத்திருக்கிறாராம். எந்த நாளிலும் பேச்சுச்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அந்த டேப் ரிகார்டரைப் போட்டுப்பார்த்துவிட்டு அந்தக் கைதட்டலைக் கேட்டபிறகுதான் அவருக்குத் தூக்கம் வருமாம்.

எனக்கு இந்தக் கவிஞர்களைப் பார்த்தால் சில சமயம் சிரிப்பு வரும். அதாவது அவர்கள் தங்கள் பெயர்களின் முன்னால் 'கவிஞர்' என்ற பட்டத்தை மறக்காமல் ஒட்டிக் கொள்கிறார்கள்.

எங்கேயோ அரசியல் கூட்டங்களிலேகூட இந்தப் பெயர்களைக் கேட்டு இருக்கிறேன். அமைச்சர்கள் கூடத் தங்களை அமைச்சர்கள் என்று சொல்லிக் கொள்வதில் திருப்தி பெறுவது இல்லை. இந்தமாதிரி கலையம்சம் பொருந்திய பெயர்களைச் சேர்த்துக்கொள்வதில் சந்தோஷம் அடைகிறார்கள்.

இவற்றை எல்லாம் படிக்கிற காலத்தில் ரசித்து இருக்கிறேன், அந்த ஆசிரியர் ஒரு கவிதைப் பயித்தியம் தான். போதாக் குறைக்கு மற்ற ஆசிரியர்கள் தூண்டி விட்டுவிடுவார்கள். 'உங்கள் நூல் வெளிவர வேண்டும்’ என்று தொடர்ந்து கூறிவிடுவார்கள். அவர்கள்மேல் என்ன தவறு இருக்கிறது. இவர் விடாமல் வருகிறவர் போகிறவர்களை நிறுத்தி வைத்துத் தான் எழுதிய கவிதைகளை படித்துக் காட்டுவார், அவர்கள் படித்து ரசிப்பார்கள். உள்ளுக்குள்ளே சிரித்துக் கொள்வார்கள். இவர் அவர் முகத்தைப் பார்ப்பார், அவர்கள் இவர் முகத்தைப் பார்ப்பார்கள். கடைசியிலே விட்டால் போதும் என்று ஆகிவிடும். அதற்காக இந்த நூல் கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லுவார்கள்' இவருக்கு ரொம்ப திருப்தி.சி-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/26&oldid=1258287" இலிருந்து மீள்விக்கப்பட்டது